world

img

139 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடமாற்றம்


அமெரிக்காவில் 139 ஆண்டுகள் பழமையான கட்டிடம் பெயர்த்தெடுக்கப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. 

அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரத்தில் ராணி விக்டோரியா காலத்தில் 139 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடு 1880களில் இத்தாலிய முறையில் கட்டப்பட்டது.
6 படுக்கையறை, 3 குளியலறைகளுடன் கட்டப்பட்டு பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்களின் தேவைக்கேற்ப சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறு இடத்துக்கு  இந்த வீடு மாற்றப்பட்டது. இதற்காக வீடு அப்படியே பெயர்த்தெடுக்கப்பட்டு மணிக்கு 1 மைல் தூரம் என்ற கணக்கில், ஹைட்ராலிக் இயந்திரங்களின் உதவியுடன் சாலையில் மெதுவாக நகர்த்திச் செல்லப்பட்டது.
வீட்டை சாலைகளில் நகர்த்திச் சென்ற காட்சி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது

;