world

img

அமீரகத்தில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்

அமீரகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் முதியவர்களுக்கு  தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பும்,.  பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது.  உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அமீரகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அமீரக சுகாதாரம் துறையின் ஒத்துழைப்புடன் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து அமீரகத்தில்  துபாய், சார்ஜா, அஜ்மான், அபுதாபி, உம் அல் குவைன், புஜேரா, ராசல் கைமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ மையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு வீட்டிற்கு சென்று தடுப்பூசி போடப்படுகிறது.

அமீரக தலைவர்களின் வழிகாட்டுதலின்படி சமூகத்தில் முதியவர்களது நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தடுப்பூசி போடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுமக்களும் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
 

;