world

img

உலகில் முதல் முறையாக படமெடுக்கப்பட்ட மஞ்சள் நிற பென்குயின்

உலகில் முதல் முறையாக மஞ்சள் நிற பென் குயினை பறவையில் ஆய்வாளர் படம் பிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்டார்ட்டிகா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவை ஆய்வாளர் ஒருவர் ஆவணப்படம் எடுத்துள்ளார். அப்போது அங்கு மஞ்சள் நிறத்திலான பென் குயின் ஒன்றைக் கண்டார். மஞ்சள் நிற பென்குயினுடன் வழக்கமான வண்ணமுடைய எம்பரர் பென் குயின் ஒன்றும் உலா வருவதை பார்த்த அவர் இரண்டையும் படம் பிடித்துள்ளார்.
மற்ற உயிரினங்களில் உள்ள அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதைப்போல முதல்முறையாக பென்குயினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

;