world

img

தீக்கதிர் உலக செய்திகள்

காங்கோ சிறையில்  129 பேர் சுட்டுக்கொலை 

காங்கோ மத்திய சிறையில் ஏற்பட்ட அசாதா ரண சூழலைத் தொடர்ந்து 129 கைதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1500 கைதி களை மட்டுமே அடைக்கும் அளவு கொண்ட சிறைச் ச்சாலையில் 12,000 க்கும் அதிகமான ஆண்,பெண் கைதிகளை காங்கோ அரசு அடைத்துள்ளது. மேலும் போதிய உணவு, குடிநீர், மருந்துகள் இல்லாத அடிப்படை மனிதத்தன்மையற்ற சூழலில் கைதிகள் சிறையை உடைக்க முயன்றுள்ளனர். இதனால் 129 கைதிகளை சிறைக்காவலர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

வெனிசுலாவில் தொடரும்  ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சி

வெனிசுலாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற் கான சூழ்ச்சி இன்னும் தொடர்கிறது என வெனிசுலா பாதுகாப்புத் துறை அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் எச்சரிக்கை விடுத் துள்ளார். சர்வதேச அளவில் வெனிசுலாவுக்கு எதிரான பிரச்சாரத்தை அமெரிக்கா  செய்து வரு கிறது. நமது நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பது தான் அமெரிக்காவின் நிரந்தர இலக்கு. வெனிசுலா மீதான ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் கனடா  உள்ளிட்ட  பல நாடுகளின் அணுகுமுறை அதனை உறுதி செய்கிறது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மரணத்தின் விளிம்பில்  10 ஆயிரம் புற்றுநோயாளிகள் 

காசாவில் போதிய மருந்துகள் மருத்துவ மனைகள் இல்லாத காரணத்தால் சுமார்  10,000 புற்றுநோயாளிகள் மரணத்தின் விளிம்பில் உள்ளதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்துள் ளன. போர் துவங்கியதில் இருந்து தற்போது வரை சுமார் 17 லட்சம் பாலஸ்தீனர்கள்  தொற்று நோய்க ளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என காசா பகுதிக்கான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார்  60,000 கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரப் பாதுகாப்பு இல்லாததால் கருக் கலையும் அபாயத்தில் உள்ள னர் என்றும்  எச்சரிக்கப்பட்டுள்ளது.

மங்கோலியாவில் புடின்:  சிவப்புக் கம்பள வரவேற்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மங்கோலி
யாவிற்கு அரசு முறைப் பயணமாக சென்றார். மங்கோலிய அரசு சர்வதேச நீதிமன்ற உத்தரவின்படி அவரை கைது செய்ய வேண்டுமென உக்ரைன் அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால் மங்கோலியா புடினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து உக்ரைன் உத்தரவை உதாசீனப்படுத்தியுள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.

ராஜினாமா செய்யும்  உக்ரைன் அமைச்சர்கள்

உக்ரைனில் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா உள்ளிட்ட ஏழு அமைச் சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இது உக்ரைன் அரசியலில் புதிய குளறுபடிகளை காட்டுகிறது. அமைச்சர்கள் மட்டுமின்றி ஜனாதிபதியின் உதவி யாளர் ஒருவரும் ராஜினாமா செய்துள்ளார். ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்குள் பல இடங்களை பிடித்து வரும் நிலையில் இந்த ராஜினாமாக்கள் நடந்து வருகிறது. எனினும் இது அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதி என ஜெலன்ஸ்கி தரப்பு கூறுகின்றது.