ஈரானின் கச்சா எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் தலைநகர் தெஹ்ரானில் நச்சு அமில மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள நான்கு கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கும் தெஹ்ரானில் ஏற்பட்ட இந்த தாக்குதலால் காற்று மாசுபாடு கடுமையாக உயர்ந்துள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள், எண்ணெய் கிடங்குகள் எரிவதால் உருவாகும் நச்சு வாயுக்கள் காரணமாக அமில மழை (Acid Rain) பெய்யும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
கரும்புகை நகரம் முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு தொண்டை வலி, கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பாடுகாப்பாக இருக்க் அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது
