இந்தோனேசியா, வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நிலச்சரிவில் பயணிகள் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது எனவும் தற்போது அப்பேருந்தை இந்தோனேசிய மீட்புப் படையினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் முதல் பெய்து வரும் மழையில் நான்கு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்புப்படை தெரிவித்துள்ளது.