பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஜெலன்ஸ்கி சந்திப்பு
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த முன்மொ ழிவு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பிரான்ஸ் ஜனாதி பதி மக்ரோனை சந்தித்துள்ளார். போரை தொட ர்ந்து நடத்த ஐரோ ப்பிய நாடுகள் திட்டமிடுகின்றன என்று ஹங்கேரி ஜனாதிபதி ஓப் ரான் எச்சரிக்கை விடுத்த சில நாட்களில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைத் திரட்டும் நோக்கிலானது என கூறப்படுகிறது.
உலகச் சந்தையில் நைஜர் யுரேனியம்
நைஜர் நாட்டின் ராணுவ அரசு 2025 ஜூன் மாதம் அந்நாட்டின் யுரேனியச் சுரங்கங்களை நாட்டுடைமையாக்கியது. தற்போது சர்வதேசச் சந்தையில் யுரேனியத்தை விற்பனைக்கு வைப்பதாக அறிவித்துள்ளது. சந்தை விதிகளின்படி தங்கள் இயற்கை வளங்களை முழுமையான சுதந்திரத்துடன், யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிபந்தனையின் கீழ் விற்பதற்கு நைஜருக்குச் சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்று அந்நாட்டு அரசை நிர்வகிக்கும் ராணுவத் தளபதி ஜெனரல் அப்துர்ரஹ்மான் தியானி தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் ராணுவ போர்க்குற்றம் : மூத்த அதிகாரி வாக்குமூலம்
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் சிறப்புப் படை போர்க் குற்றங்களைச் செய்தது. இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருந்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்நாட்டு ராணுவத்தின் முன்னாள் ராணுவ அதிகாரி பொது விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரின்போது, அமெரிக்க ராணுவத்துடன் செயல்பட்ட பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் சந்தேகம் என்ற பெயரில் 54 ஆப்கானிஸ்தர்களை சுட்டுக்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலா வான்வெளி மூடப்பட்டதாக அறிவித்த டிரம்ப்
வெனிசுலா கடலோரப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கப்பற்படை போர் விமானங்கள் தொடர் தாக்குதல்களையும் அத்து மீறல்களையும் செய்து வருகின் றன. இந்நிலையில் அந்நாட்டு வான் வெளியை பயன்படுத்தும் விமானங் கள் அந்த வான்வெளி மூடப்பட்டுள்ள தாக கருதிக்கொள்ளவும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இது வெனிசுலா மீது அமெரிக்கா வான்வெளித்தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த அச்சுறுத்தல் பகைமை நிறைந்த காலனித்துவ நடவடிக்கை என வெனிசுலா கடுமையாகக் கண்டித்துள்ளது.
பெண் பத்திரிகையாளருக்கு இஸ்ரேலில் பாலியல் வன்கொடுமை
காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் பணியாற்றிய பாலஸ்தீன பெண் பத்திரிகையாளரை 2024 ஆம் ஆண்டு இஸ்ரேல் ராணுவம் கடத்திச்சென்றது. அவரை 20 மாதங்கள் சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட உடல் ரீதியிலான சித்ரவதை செய்து கொடுமை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். பத்திரிகையாளர் உட்பட ஏழு பேர் கண்கள், கைகள் கட்டப்பட்டு தனிமையான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
