டிரம்ப்பின் போர்வெறி ஆதிக்கத்தை ஆதரிக்க உச்சி மாநாடு
வாஷிங்டன்,மார்ச் 9- அமெரிக்காவின் மேலாதிக் கத்தையும் போர் வெறியையும் ஆதரிக்கும் வகையில் மார்ச் 7 சனிக்கிழமையன்று புளோரிடா வின் மியாமி நகரில் அமெரிக்கா வின் கேடயம் (Shield of the Americas) என்ற பெயரில் உச்சி மாநாடு ஒன்று நடந்துள்ளது. டிரம்ப்பின் அடிவருடியான அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேய், எல் சால்வடார், ஈக்வடார், கோஸ்டாரிக்கா, டொமி னிகன் குடியரசு, பனாமா, பராகு வே, பொலிவியா, ஹோண்டுராஸ், கயானா, டிரினிடாட், டொபாகோ ஆகிய 12 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மெக்சிகோ, கொலம்பியா, பெரு, பிரேசில், வெனிசுலா, உரு குவே, குவாதமாலா, நிகரகுவா போன்ற லத்தீன் அமெரிக்காவின் பிற முக்கிய நாடுகள் இந்த மாநா ட்டில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்க போர்த்துறை செய லாளர் பீட் ஹெக்செத் இம்மாநாடு குறித்து பேசிய போது மன்றோ கோட்பாட்டை டிரம்ப் மீண்டும் நிலைநாட்டியுள்ளார். மேற்கோ ளத்தில் உள்ள நாடுகளின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்கும் என கூறியுள்ளார். வட அமெரிக்கா, தென் அமெ ரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதி, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி கொள்ளையடிப்பதற்காக 1823 இல் அமெரிக்கா மன்றோ கொள்கையை முன்வைத்தது. சமீப ஆண்டுகளில் அமெரிக்கா வுக்கு மாற்றாக சீனாவின் பொரு ளாதார வர்த்தக உறவுகள் இந்த நாடுகளுடன் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் தான், அந்நாடு களின் மீதான ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்க டிரம்ப், மன்றோ கோட்பாட்டிற்கு “டான்ரோ கோட்பாடு” என்று மறுபெயரிட்டார். இதன் பின்னணியில் சீனா வின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் தென் அமெரிக்க நாடுகள் சீனாவுடன் மேற்கொள்ளும் வர்த்த கத்தை குறைக்க வைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
