வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
வெனிசுலா அமெரிக்காவுக்கு அடிமையாகச் செயல்பட மறுத்து வருவதால் அந்நாட்டு ஜனாதிபதி மதுரோ போதைப் பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்துவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் டிரம்ப்.
மேலும்,அந்நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த திட்டமிட்டு வருகிறார். வெனிசுலா கடற்பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்தி போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில்,வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
