world

img

விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் பலி 50 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், ஜூன் 8-

தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோர்கி மாவட்டத்தில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு ரயிலும் நேற்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில், 30 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்டத்தின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் தெரிவித்திருந்தனர். இந் நிலையில் தற்போதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதனிடையே ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
 

;