world

img

கொரோனாவால் 25 சதவிகிதம் பேருக்கு மனநலம் பாதிப்பு – ஆய்வில் தகவல்!  

கொரோனா தொற்றால் 25 சதவிகிதம் பேர் மனநலம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

உலகம் முழுவதும், உலக சுகாதார நிறுவனம் நடத்திய மனநலம் பற்றிய ஆய்வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டில் நோயின் தாக்கம் மற்றும் கட்டுப்பாடுகளால் மனநல பிரச்சினை 25 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. இதில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏற்கனவே மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிக அளவில் பாதிப்படைந்தனர்.  

உலக அளவில் 8 பேரில் ஒருவர் மனநல பிரச்சினைகளுடன் வாழ்வது தெரிய வந்துள்ளது. 5ல் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டாலும் சுவாச பிரச்சினை, இந்தியாவில் மட்டும் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். உலக அளவில் இந்த எண்ணிக்கை 14 கோடியை தாண்டியுள்ளது.  89.3 சதவீதம் பேர் சுவாசக் கோளாறு பிரச்சினையை சந்தித்துள்ளனர். 78.9 சதவிகிதம் பேர் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகி உள்ளனர். 55.2 சதவிகிதம் பேர் அறிவாற்றல் சார்ந்த பிரச்சினைகளை சந்தித்துள்ளனர்.  

மேலும் அமைதியின்மை, அதிகமான இதயத்துடிப்பு, தூக்கமின்மை, நெஞ்சுவலி, இடைவிடாத தலைவலி போன்ற பிரச்சினைகளை ஒரு வருடத்திற்கும் மேலாக அனுபவித்துள்ளார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.