world

உலகச் செய்திகள்

பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பெல்ஜியம் சுற்றுப் பயணம் முடித்துவிட்டு பரிசோதனை செய்தபோது இது தெரியவந்தது. இதனால், சுற்றுப்பயணத்தில் இவரைச் சந்தித்த பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ மற்றும் நான்கு அமைச்சர்கள் தங்களைத் தனி மைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

சீனாவுக்கும், கம்போடியாவுக்கும் இடையில் தாராள வர்த்தக உடன்பாடு  ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்பாடு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி யன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. 90 சதவிகித பொருட்கள் மீது இருதரப்பிலும் வரி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இழுபறியாக நீடித்துக் கொண்டிருக்கும் சவூதி அரேபியா மற்றும் ஏமன் போருக்கு அமெரிக்காதான் காரணம் என்பதால் ஏமனில் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றுள்ளது. ஏமன் நகரங்களில் ஒன்றான சாத் நகரில் நடைபெற்ற பெரும் திரள் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

;