what-they-told

img

வெட்டுக்கிளியால் பயிர்கள் நாசம் - விவசாயிகள் கவலை

தருமபுரி, செப்.26- நல்லம்பள்ளி பகுதியில் வெட்டுக்கிளி படையெடுப்பால் விவசாய பயிர்கள் நாசம டைந்துள்ளது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி  மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றி யத்துக்குட்பட்டது  பாகல் அள்ளி ஊராட்சி.  இவ்ஊராட்சியில் கொங்களாபுரம், சவுளூர், குரும்பட்டி போன்ற பகுதிகளில் சோளம், பயிர்கள் சுமார் 500 ஏக்கருக்குமேல் பயிரி டப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் அதி களவில் விவசாய நிலங்களை அழித்த வெட் டுக்கிளிகள் தற்போது தமிழகத்திலும் படை யெடுக்க தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக  கொங்களாபுரம் பகுதியில் 10 ஏக் கருக்கு மேற்பட்ட சோளம் மற்றும் ராகி பயிர் களை முற்றிலுமாக நாசம் செய்துவிட்டது. அதிகளவில் வெட்டுக்கிளிகள் முகாமிட்டுள் ளதால் சுற்றியுள்ள சுமார் 500 ஏக்கருக்கு மேற் பட்ட விவசாய நிலங்களில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வெட்டுக் கிளிகள் நல்லம்பள்ளி பகுதியில் படை எடுத்தி ருக்கும் சூழ்நிலையில் வேளாண்மை துறைக்கு தகவல் தெரிவித்தால் நில உரிமை யாளர் மருந்து வாங்கி கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். மேலும், பூச்சிகொல்லி  மருந்து களால் 25 விழுக்காடு வெட்டுகிளிகளை மட் டுமே அழிக்க முடிகிறது. 75 விழுக்காடு வெட் டுக்கிளிகள் சுற்றி திரிகிறது என அப்பகுதி விவ சாயிகள் தெரிவித்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், வெட் டுக்கிளியால் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என  அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத் திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

;