what-they-told

img

நார்வே ஓப்பன் செஸ் போட்டி யில் இந்தியா

நார்வே ஓப்பன் செஸ் போட்டி யில் இந்தியாவின் குகேஷ், இனியன் பன்னீர்செல்வம் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். சென்னை செம்மஞ்சேரியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள 91.04 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் தெரிவித்துள்ளார். பிரபல கல்வி நிறுவனமான ஜேப்பியார் கல்வி குழுமங்களால் இந்த நிலம் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது.

ஒன்றிய அரசின் கல்வி நிறுவ னங்கள் மற்றும் மத்திய பல் கலைக்கழகங்களில் படிக்கும் தமி ழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று பிற் படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீர் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களை தலைமைச் செயலா ளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள் ளார்.

தமிழகத்தில் கல்குவாரிகளை அனு மதிக்கும் போது, கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் இலவச தொலை மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்கான வசதியை ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.  

நாட்டில் 700-க்கும் அதிகமான மாவட்டங்க ளில் உள்ள பள்ளிகளில் ஓராண்டிற் குள் ஜாக்யாஷா என்ற மாணவர் - விஞ்ஞானி இணைப்புத் திட்டம்  விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். கொரோனா  தொற்று காரண மாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான குறு-சிறு நடுத்தர தொழில் நிறுவ னங்களுக்கு கூடுதல் பிணையச் சொத்து மற்றும் செயலாக்க கட்டணம் ஏதுமின்றி கடனுதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அறிவித்துள்ளது.

பரம்பிக்குளம் -ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண் டும் என்று கேரள மாநில அரசிடம் தமி ழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. திறன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வேயில் மூன்று ஆண்டுக ளில் 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு வழங் கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வைத்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

2 மாதத்திற்குள் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி 6 மாதத்திற்குள் ஒன்றிய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியை தமிழ்நாடு மின்சார வாரியம் பெற வேண்டும் என்று  தெரிவித்துள்ளது.

;