what-they-told

img

பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்தக்கோரி தொடர் முழக்கம் - மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்குமா?

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளில் தேங்கி யுள்ள குப்பைகள் தினசரி சேக ரிக்கப்படுகின்றன. இதனை தரம் பிரிப்பதற்கும், அப்புறப்படுத்து வதற்கு, தனியாருக்கு டெண்டர் விடப்படுகின்றனர். இந்நிலையில், இக்குப்பைகளை திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட அம்மா பாளையம் 11வது வார்டு கானக்காடு பகுதியில் சுமார் 3  ஏக்கர் பரப்பள வில் தனியாருக்குச் சொந்தமான பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி, பொதுமக்கள், விவசாயிகள் பெரி தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  முதல்வரிம் சிபிஎம் மனு இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை உள்ளிட்ட நிர்வா கத்திடம் அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் மனு அளித்தனர்.  ஆனால், எவ்வித நடவடிக்கையும்  எடுக்காத காரணத்தால், சாலை மறி யல், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வரு வாய்த்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பொதுமக்க ளுக்கு பாதிக்காத வகையில், பாறைக் குழியில் மருந்துகள் தெளித்து தூய் மையாக வைக்கப்படும் என உறுதி யளித்தனர். இருப்பினும் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குப்பைகளை கொட்டக்கூடாது என உறுதியாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணி களை துவக்கி வைப்பதற்காக தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவி நாசி சாலை வழியாக திருப்பூர் செல்லும் போது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி குழந்தைகள் பொதுமக்கள் ஆகி யோர் பாறைக்குழிக்குள் குப்பை களை கொட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோரிக்கை மனு அளித் தனர். இருப்பினும் குப்பைகள் கொட் டும் பணி தினசரி நடைபெற்று வரு கிறது.

நிலத்தடி நீர் பாழ்பாடும் நிலை

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயியான ஜெயக் குமார் கூறுகையில், பாறைக்குழி அருகே எனது தோட்டம் உள்ளது. இதில், பல ஆண்டு காலமாக விவ சாயம் செய்து வருகிறேன். தற்பொ ழுது பாறைக்குழிக்குள் குப்பைகள் கொட்டுவதும் மூலமாக, துர்நாற்றம் ஏற்பட்டு, கால்நடைகள், மற்றும் எங் கள் குடும்பத்தினர் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறோம். மேலும் காலப்போக்கில் நிலத்தடி நீர் மாசு படும் சூழ்நிலை உருவாகும். இத னால் விவசாயம் செய்யமுடியாத  சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என வேதனை தெரிவித்தார்.

உடல்நிலை சரியில்லாமல் போகிறது

பாறைக்குழி மிக  அருகே ராதா கிருஷ்ணா வீதியில் எனது அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இக்குடி யிருப்பில் 5க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். பாறைக்குழியில் குப்பைகள் மூலம் வருகின்ற துர்நாற்றம் காரண மாக பலரது உடல்நிலை பாதிக்கப் படுகிறது. இதன் காரணமாக, அடுக் குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஒரு சிலர் வீட்டை காலி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுக் குமாடி குடியிருப்பின் வருகின்ற வரு வாய் மூலம், வாழ்க்கை நடத்தி வந்தோம். தற்பொழுது வாழ்வாதா ரம் கேள்விக்குறியாகி விட்டது. மேலும், குப்பைகளில் இருந்து வரு கின்ற ஈக்கள், உணவுப் பண்டங் களில் ஒட்டிவிடுவதால் வாந்தி மற் றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது என அப்பகுதியைச் சேர்ந்த சரஸ் வதி குமுறியுள்ளார்.

சுவாசிப்பதற்கே சிரமம்

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வி சுந்தர்ராஜ், கனக ராஜ், ஆறுமுகம் ஆகியோர் கூறுகை யில், குப்பையின் மூலம் வருகின்ற துர்நாற்றம் காரணமாக, 24 மணி நேரமும் சன்னல், கதவுகளை அடைத்தே வைத்துள்ளோம். இத னால், இயற்கை காற்றை சுவாசிப்ப தற்கே மிக கடினமாக உள்ளது. துணி களின் மேல் ஒட்டிக்கொள்ளும் பூச்சி களால் தோல் நோய் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் வாழ்கின்ற சூழல் உரு வாகியுள்ளது. சொந்த வீட்டின் உரி மையாளர்கள் வேறு இடத்தை நாடி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. மேலும், இப்பகுதியில் குப்பை கொட்ட தொடங்கிய நாளி லிருந்தே வீட்டுச்சிறையில் இருந்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடுமையான துர்நாற்றம், இதன் மூலமாகவே பல நோய்கள் காரண மாக பல நிறுவனங்களும் காலி செய் யும் சூழ்நிலை  உருவாகிவிட்டது.

தொடர் போராட்ட எச்சரிக்கை

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின்  ஒன்றி யக்குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியம், கிளைச் செயலாளர்கள் காமராஜ், ராஜ், ஈஸ்வரன் ஆகியோர் கூறுகையில், பாறைக்குழியில் குப்பை கொட்டுவதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிக் குழந்தைகள் கல்வி பயிலும்  நேரங்களில் துர்நாற்றம் ஏற்பட்டு ஜன்னல்கள், கதவுகளை, அடைத்து வைத்து பாடம் கற்றுக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது.

எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குப்பை கொட் டுவதை நிறுத்தம் செய்ய வேண் டும். இதேநிலை தொடருமானால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் திரளான மக்களை திரட்டி தொடர் போராட்டங் களில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். -மா.அருண், அவிநாசி
 

 

;