what-they-told

img

பிர்சா முண்டாவிடமிருந்து மோடி அரசு கற்றுக்கொள்ளட்டும்

பிரதமராக பதவியேற்ற காலத்திலிருந்து பத்திரிகை யாளர்களை சந்திக்காமலும் விலைவாசி அதிகரிப்பால் அவதிப் படும் மக்களை சந்திக்காமலும் அவர்களைப் பற்றி கவலைப் படாமலும் அவர் மட்டுமே பேசும் ’ஒன்வே’ நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அக்டோபர் 24 ஞாயிறன்று 82-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அவரது உரை யில், “100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது. தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்று கிறது. 100 கோடி தடுப்பூசிக்கு பின்  எண்ணற்ற தன்னம்பிக்கை கதை கள் அடங்கியுள்ளன.  பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கினால் ஏழை வியாபாரிகளின் வீட்டில் பிரகாசம் ஏற்படும்” என்று முழங்கினார்.  ஆனால் நாட்டில் 21 சதவீதம் பேருக்குத்தான் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது என்றும் 100 கோடி பேருக்கு செலுத்தியுள்ளதாக பிரதமர்  பொய் சொல்கிறார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமை யாக விமர்சித்துள்ளன.

மேலும் இந்த உரையில் மோடி, “சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 தேசிய  ஒற்றுமை தினமாக கடை பிடிக்கப்படுகிறது. தேசிய ஒற்றுமை யை ஊக்குவிக்கும் ஒரு செய லிலாவது நாம் ஈடுபட வேண்டும். அடுத்த மாதம், பகவான் பிர்சா முண்டாவின் ஜெயந்தியை இந்தியா கொண்டாட உள்ளது.  அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுத்தது ஒருவரின் சொந்த கலாச்சாரத்தைப் பற்றி எப்படி பெருமை கொள்வது, சமூகத்தை  கவனித்து அநீதியை எதிர்த்துப் போராடுங்கள்.  இளைஞர்கள் அவரைப் பற்றி படிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொடுண்டுள்ளார்.  விடுதலைப்போராட்ட வீரரும் பழங்குடி மக்களின் நில உரிமைக் காக போராடியவருமான பிர்சா முண்டாவை பற்றி இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று பிரதமர்  மோடி கூறியது நல்லது; வரவேற்கத் தக்கது. ஆனால் விடுதலைப்போராட்ட வீரர் பிர்சா முண்டாவைப் பற்றி  முதலில் படிக்க வேண்டியது, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பிரதமர் மோடியும் அவரது தலைமையிலான ஒன்றிய அரசும்தான்.

தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான இராஞ்சி மாவட்டத்தில் உள்ள உலிகாட் என்ற பகுதியில்  1875ஆம் ஆண்டு பிறந்த விடுதலைப்போராட்ட வீரர் பிர்சா முண்டா   ஆங்கிலேய ஆட்சிக்கு எதி ராக போராடினார்.  உள்நாட்டு நில வுடமை ஜமீன்தார்களிடம் அடிமைப் பட்டிருந்த பழங்குடி மக்களுக்காக வும் அவர்களது நில உரிமைக்காக வும் போராட்டங்களை நடத்தினார் . ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்று அறைகூவல் விடுத்து பழங் குடி மக்களை திரட்டி போராடினார்.  பிர்சா முண்டா பெயரை உச்சரித்துள்ள பிரதமர் மோடி, நில உரிமைக்காக, போராடிய நாட்டின் முதுகெலும்பான விவசாயி கள் மற்றும் விவசாயத்தொழிலா ளர்களின் நலன்களை அவர்களது வாழ்வாதாரத்தை பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களின் லாபங் களுக்காக பலிகொடுக்காமல் அவர் களை காப்பாற்ற வேண்டும் என்பதை பிர்சா முண்டாவின் வாழ்க்கை வர லாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடும் விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை காது கொடுத்து நிறைவேற்ற வேண்டும் என்பதை, தான் வாழ்ந்த 25 ஆண்டு காலத்தையும் மக்களுக்காக போரா டிய பிர்சா முண்டாவிடமிருந்து மோடியும் மோடி அரசும் கற்றுக் கொள்ள வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங் களுக்கு எதிராக போராடிய விவ சாயிகளை காரை ஏற்றிக்கொன்றார் ஒன்றிய அமைச்சரின் மகன். அதற்காக வருத்தமோ இரங்கலோ கூட தெரிவிக்க மனமில்லாத பிரத மர் மோடியும் ஒன்றிய அரசும், அவர்களின் துயரத்தைப் எப்படி போக்குவது என்பதை மக்களையும் விவசாயிகளையும் நெஞ்சுக்குள் வைத்து நேசித்த பிர்சா முண்டா விடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய நாட்டு மக்களும் விடு தலைப்போராட்ட வீரர்களும்  இறை யாண்மை கொண்ட  தேசத்தை கட்ட மைக்க எவ்வாறு பாடுபட்டார்கள் என்பதை பிர்சா முண்டா போன்ற எண்ணற்ற தியாகிகளின் வர லாற்றிலிருந்து மோடி அரசு முத லில் கற்றுக்கொள்ளட்டும்.  -

எஸ்.உத்தண்ட்ராஜ்

;