what-they-told

img

குமரி மாவட்டத்தில் மழை குறைந்தது திற்பரப்பு அருவியில் மிதமான வெள்ளம்

நாகர்கோவில், அக்.21- குமரி மாவட்டத்தில் மழை குறைந்து ஆறுகளில் நீர் வரத்தும் குறைந்துள்ளது. அணைகளிலிருந்து நீர் திறப்பும் நிறுத்தப் பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் நீர் வரத்து குறைந்து மிதமாக தண்ணீர் கொட்டுகிறது. ஆனாலும், மாவட்டம் முழுவதும் இந்த மாதத்தில் இதுவரை இயல்பை விட 116 மி.மீ. மழை அதிகம் பெய்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பெய்த கனமழையால் ஆறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடி யிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள், வாழை, மரவள்ளிக் கிழங்கு, காய்கறி வகைகள் சேதம் அடைந்தன. சேதத்தை கணக்கெ டுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்திருக்கிறது.

பேச்சிப் பாறை அணைக்கு வியாழனன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,043 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ் சாணி அணைக்கு வினாடிக்கு 1,075 கன அடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினா டிக்கு 17 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 31 கனஅடி தண்ணீ ரும், பொய்கை அணைக்கு வினாடிக்கு 27 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறை யாறுக்கு 4 கன அடியும் முக்கடல் அணைக்கு வினாடிக்கு 11 கனஅடி தண்ணீரும் வந்தது. வியாழனன்று பெருஞ்சாணி அணை யில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீ ரும் மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீரும் முக்கடல் அணையில் இருந்து விநாடிக்கு 7.2 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இத னால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்த தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது. மழையளவு குமரி மாவட்டத்தில் வியாழனன்று காலை 8 மணி வரையிலான மழை பதிவு: அதிகபட்சமாக கொட்டாரத்தில் 41.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆரல்வாய் மொழி-32, சுருளகோடு-16.2, நாகர்கோவில் -13, அடையாமடை-13, பாலமோர்-12.8, மைலாடி-12, பூதப்பாண்டி-8.2, பெருஞ் சாணி-8, ஆனைக்கிடங்கு- 7.2, முக்கடல் அணை-7.2, கன்னிமார்-6.8, புத்தன் அணை -6.2, மாம்பழத்துறையாறு-5.4, பேச்சிப் பாறை-5.2, களியல்-5, சிவலோகம் (சிற்றார் -2)- 4.6, குழித்துறை-4.3, தக்கலை-4.

;