what-they-told

img

குழந்தை திருமண வழக்குகள் 50% அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் முதலிடம்

புதுதில்லி,செப்.19- குழந்தை திருமண வழக்குகள் 50 சதவீதம் அதி கரித்துள்ளது என்றும் இதில் கர்நாடக மாநிலம் முதலி டத்தில் உள்ளது என்றும் தேசிய குற்றப் பதிவாணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. தேசிய குற்றப் பதிவாணையத்தின் தகவல்படி, 2020ஆம் ஆண்டில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 785 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 184 வழக்குகள் பதி வாகியுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் அசாமில் 138 வழக்குகள், மேற்கு வங்கத்தில் 98 வழக்குகள், தமிழ்நாட்டில் 77 வழக்குகள், தெலுங்கானாவில் 62 வழக்கு கள் பதிவாகியுள்ளன. 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுக்கோ, 21 வயதுக்கு உட்பட்ட ஒரு ஆணுக்கோ திருமணம் நடத்தப்பட்டால் அது குழந்தை திருமணம் என இந்திய சட்டம் கூறு கிறது. எனினும், குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை பெருமளவு  உயர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும்  குழந்தை திருமணங்கள் குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைத் திருமணங்கள் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தானது எனவும், இதனால் பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படும் என்றும் நிபு ணர்கள் எச்சரிக்கின்றனர்.
 

;