what-they-told

img

அபாயகரமான மரங்களால் ஆபத்து

நீலகிரி, செப்.25- உதகை -இடுஹட்டி சாலையில் பல இடங்களில் சாலை களின் குறுக்கே மரங்கள் சாய்ந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து இடுஹட்டி செல் லும் சாலையில் கோடப்பமந்து முதல் அட்டபெட்டு வரை சாலையின் இருபுறமும் உள்ள ராட்சத மரங்கள் மழைக்கா லங்களில் சாலையில் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக் கிறது. அதுமட்டுமின்றி, கனரக வாகனங்கள் செல்லும் ்போது, இந்த மரங்களில் மோதி நின்று போக்குவரத்து பாதிக் கப்படுகிறது. வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் என்ப தால், இவற்றை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினரும் முன்வ ருவதில்லை. அதேசமயம், வனத்துறையினரும், இதுபோன்று  சாய்ந்து சாலையில் தொங்கிக் கொண்டிருக்கும் மரங்களை  அகற்றுவதில்லை.  தற்போது, கோடப்பமந்து முதல் அட்டபெட்டு வரை ஏராள மான சீகை மற்றும் கற்பூர மரங்கள் சாலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. காற்றுடன் கூடிய மழை பெய்தால், இந்த  மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், போக்கு வரத்து பாதிப்பது மட்டுமின்றி, பயணிகள் மற்றும் பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் இருந்து வரு கிறது. எனவே, இம்மரங்களை அகற்ற வனத்துறையினர் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் மற்றும் ஓட்டு நர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;