what-they-told

img

வறுமை ஒழிப்பு தினமும்- மோடிஅரசின் நடவடிக்கையும்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோ பர் 17-ஆம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டா டப்படுகிறது. வறுமையை ஒழிக்க வும் வறுமையில் வாழும் மக்கள் பற் றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை யும் நோக்கமாகக் கொண்டு 1992 டிசம் பர் 22 -இல் ஐக்கிய நாடுகள் சபை, அக்டோபர் 17 ஐ உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது.  இந்த ஆண்டின் கருப்பொருள் “ஒன்றாக முன்னேறுதல், தொடர்ந்து கொண்டிருக்கும் வறுமையை முடி வுக்குக் கொண்டுவருதல், நமது கிர கத்தையும் அனைத்து மக்களையும் மதித்தல்” என்பதாகும்.  உலக வங்கியின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் உலகைத் தாக்கிய கொரோனா 1.43 பில்லியன் (பில்லி யன்=100 கோடி) முதல் 1.63 பில்லியன் மக்களை வறுமையில் தள்ளி உள்ள தாகக் கூறப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு கொரோனா பர வலுடன் 2020-ஆம் ஆண்டு கொரோனா பரவலை ஒப்பிட்டால் வறுமை 8.1 சத வீதம் அதிகரித்துள்ளதற்கான சாத்தி யம் உள்ளது. தெற்காசிய மற்றும் சஹாரா நாடு களில் புதிய ஏழைகள் பெரும்பான் மையாகக் காணப்படுவதாகவும் தெரி வித்து உள்ளது. மேலும் இந்த எண் ணிக்கை இந்த ஆண்டு14 முதல் 16 கோடி ஆக அதிகரித்திருக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் வறுமை விகிதம் 2015 மற்றும் 2018-ஆண்டுக்கு இடை யில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 3.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், “தற்போது வறுமை தீவிர மாக அதிகரித்து வருகிறது. கொரோனா, உலகில் உள்ள நாடுகளின் பொரு ளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது உலகின் வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் ஆழமாக்கியுள்ளது” என்று கூறி உள்ளார்,

இந்தியாவின் நிலை

இந்தியாவின் அடிப்படை பிரச்ச னைகளில் ஒன்று, சமத்துவமின்மை. பொருளாதார ரீதியாகவும், வாழ்வு ரிமை ரீதியாகவும் இந்தியா கடும் ஏற்றத்தாழ்வை கொண்ட நாடாக உள்ளது. மக்கள் தொகையில், உயர் வர்க்கத்தில் உள்ள பத்து சதவீத பிரி வினரிடமே 80 சதவீத சொத்துகள் இருக்கின்றன. இந்த விகிதாச்சாரமே இந்தியாவை மீள முடியாத சுழ லுக்குள் தள்ளியுள்ளது. இவை தலை முறை தலைமுறையாக மக்களை வறுமையில் ஆழ்த்தச் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை யில் தனிநபரின் ‘நுகர்வுத் திறன்’ அடிப்படையில் வறுமைக்கோடு கணக்கிடப்படுகிறது. கிராமப்புறத் தில் நாளொன்றுக்கு 32 ரூபாயும், நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் செல விடமுடியாத சூழலில் இருக்கும் நபர் வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள வராக அடையாளப்படுத்தப்படு கிறார். இது 2012-ஆம் ஆண்டில் உரு வாக்கப்பட்ட ரங்கராஜன் குழுவின் கணக்காகும். அதன்படி 2011-12-இல் இந்தியா முழுமைக்குமாக 29.5 சத வீதத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தனர். இந்திய மக்களில் ஐந்து பேர்களில் ஒருவர் வறுமைக்கோட் டுக்குகீழ் வாழ்கிறார்.

மக்களின் நுகர்வுத் திறனை 2011-12- ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18-ஆம் ஆண்டு 3.7 சதவீதம் அளவில் சரிந்துள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறத் தில் நுகர்வுத் திறன் பத்து சதவீதம் சரிந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்திய பொருளாதாரக் கண்கா ணிப்பு மையத்தின் (CMIE) கூற் றுப்படி, வேலைவாய்ப்பாளர்களின் எண்ணிக்கை 2021 ஜூலை மாதம் 399.38 மில்லியனில் இருந்து 2021 ஆகஸ்ட் மாதத்தில் 397.78 மில்லிய னாக குறைந்தது, கிராமப்புற இந்தியா வில் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2021 ஜூலை மாதம் 6.95 சதவீதத்தி லிருந்த தேசிய வேலையின்மை விகி தம் அக்டோபர் மாதம் 8.32 சதவீத மாக உயர்ந்தது. ‘நகர்ப்புற வேலையின்மை ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 1.5 சத வீதம் அதிகரித்து 9.78 சதவீதமாக இருந்தது. இது ஜூலை மாதம் 8.3 சத வீதமாகவும் ஜூன் மாதத்தில் 10.07 சதவீதமாகவும் மே மாதத்தில் 14.73 சதவீதமாகவும் ஏப்ரல் மாதத்தில் 9.78 சதவீதமாகவும் இருந்தது. மார்ச் மாதத்தில், கொரோனா இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கும் முன், நகர்ப்புற வேலை யின்மை விகிதம் 7.27 சதவீதமாக இருந்தது.

100 நாள் வேலையை மட்டுமே நம்பி 21 கோடி பேர்

இந்தியாவில் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்களே வறு மையை எதிர்கொள்கின்றனர். நவீன தாராளமய, தனியார்மயக்கொள் கைகள், கார்ப்பரேட் மயம், புதிய வேளாண் சட்டங்கள் ஆகியவற்றால் விவசாயத் தொழிலாளர்களின் வறுமை சதவீதம் அதிகரித்து வரு கிறது. கிட்டத்தட்ட 21 கோடி தொழி லாளர்கள் 100 நாள் வேலையை மட் டுமே நம்பியுள்ளனர். சாதி-மத பேத மின்றி வேலைவாய்ப்பளித்த நூறு நாள் திட்டமும் மோடி அரசால் பட்டி யல் சாதியினர், பழங்குடியினர், பிற் படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினர் என பிரிக்கப்பட்டுள்ளனர். இது தீண்டா மையை கடைப்பிடிப்பதற்கு சமமா கும். இந்தப் பிரிவினை கூடாது என இடதுசாரிக்கட்சிகள் வலியுறுத்தி வரு கின்றன. தமிழகத்தைப் பொறுத்த மட்டில் 100 நாள் வேலையில் ஈடுபடும் பிற வகுப்பினருக்கு நான்கு வாரம் முதல் ஐந்து வாரம் வரையிலும், பட்டி யல் சாதியினருக்கு ஆறு வாரம் முதல் ஏழு வாரங்கள் வரை சம்பளம் வழங்க வில்லை ஒன்றிய மோடி அரசு. அது மட்டுமல்ல. இந்தத்திட்டத்திற்கு கடந்தாண்டு 130 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.75 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 130 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தனி நபர் வருமானம் ஒரு வேளை உணவுக்கே போதுமான தாக இல்லை. இந்த நிலையில் தன் மக்களை வைத்துக்கொண்டுதான், பொருளாதார ரீதியாக உலகில் ஆறா வது பெரிய நாடு என இந்தியா பெரு மிதம் கொள்கிறது.
 

;