weather

நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு: வானிலை மையம்....

சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட் டங்கள் மற்றும் குமரி, புதுவை, காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.இதுபோல, ஜூன் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் குமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.வடக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

;