weather

img

நீலகிரி, கோவை, டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத் திற்கு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 10,11)  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.அதேபோல ஜூலை 12,13ம் தேதியன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென் காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின் னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக் கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;