weather

img

13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் அதிக மழை.....

சென்னை:
கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு, ஜூலை மாதம் சென்னையில் அதிக அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்கிறது. மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னையில் பதிவாகும் மழை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை 1 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரைக்கு நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் 216.3 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. வழக்கமாக 144 மி.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், “தென் 
மேற்கு பருவமழை குறையும் போது சென்னை உள்பட பல இடங்களில் மழை பெய்வது இயல்பு. அதுபோலவே தற்போது மழை பெய்து இருக்கிறது. ஈரப்பதத்துடன் கூடிய தென்கிழக்கு காற்று வீசியதால் இந்த மழை கிடைத்து இருக்கிறது. வரும் நாட்களில் மழை அளவு குறையும்” என்றார்.

உருவானது காற்றழுத்த தாழ்வு
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஒருசில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி ஜூலை 23 அன்று உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருந்தது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாவதற்கான சாத்திய கூறுகள் முன்கூட்டியே ஏற்பட்டதால் இன்று வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகத் தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்து புயல் சின்னமாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

;