weather

img

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்....

சென்னை:
தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப் பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது: மத்தியப் பிரதேசம் முதல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங் களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.ஜூன் 8ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட் டங்கள், கடலோர மாவட்டங் கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் நாள்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;