technology

img

பயனாளர்கள் எதிர்ப்பால் வாட்ஸ்அப்பின் திட்டம் ஒத்திவைப்பு....

வாஷிங்டன்:
பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பால்சமூகவலைத்தளமான வாட்ஸ்அப்பின் பிரைவசி அப்டேட் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளமான முகநூல் நிறுவனத்திற்குச் சொந்தமான பரிமாற்ற செயலியான “வாட்ஸ் ஆப்” பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது.பிரைவசி பாலிசி அப்டேட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அதிர்ச்சிய டைந்தனர்.இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், “நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது. வாட்ஸ்ஆப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும். பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும்.

பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம். வாட்ஸ்ஆப் தொடர்பாக பல்வேறுவதந்திகள் பரவி வருவதால் விளக்கமளிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தது.இதன்பின்னர் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது திட்டமிடப்பட்ட புதிய வர்த்தக அம்சங்களை செயல்படுத்தும் முடிவை ஒத்தி வைத்துள்ளது.  அந்நிறுவனத்தின் தகவல் பரிமாற்றம் பற்றிய விசயங்களுக்கு பயனாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இதன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதனால் பிப்ரவரி 8 ஆம் தேதியில், எவரது வாட்ஸ்ஆப் கணக்கும் தற்காலிக ரத்துசெய்யப்படவோ அல்லது நீக்கமோ செய்யப்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

;