technology

img

அடோப், பிடிஎப் மென்பொருளின் தந்தை  சார்லஸ் ஷக் கெஷ்கே காலமானார்....

லாஸ் ஆல்டோஸ் (சான்பிரான்சிஸ்கோ):
போர்ட்டபிள் ஆவண வடிவமைப்பு தொழில்நுட்பம்  (PDF)- களை உருவாக்க உதவிய  மென்பொருள் நிறுவனமான அடோப் இன்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் சார்லஸ் ஷக் கெஷ்கே  சான்பிரான்ஸிஸ் கோவில் காலமானார். அவருக்கு வயது 81.

சார்லஸ் ஷக் கெஷ்கே மறைவு அடோப் -நிறுவனத்திற் கும் தொழில்நுட்பத் துறையினருக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அடோப் நிறுவனத்தின் வழிகாட்டியாகவும் ஹீரோவாகவும் விளங்கியவர் என அடோப் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் கூறியுள்ளார்.இவரது முதல் தயாரிப்பு அடோப் போஸ்ட்ஸ்கிரிப்ட். இது ஒரு புதுமையான தொழில்நுட்பமாகும், இது எழுத்துக்கள்,  படங்களை காகிதத்தில்அச்சிடுவதற்கு எளிய புதுமையான வழியை ஏற்படுத்திக்கொடுத்தது. டெஸ்க்-டாப் வெளியீட்டில் புரட்சியை ஏற்படுத்தியவர்.  பிடிஎப், போட்டோ-ஷாப் உள்ளிட்ட சில மென்பொருள் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.
 

;