technology

img

தொடர்ந்து 20 செயற்கைக் கோள்களை  ஏவ திட்டம்....

பெங்களூரு:
சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் உள்பட 20-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக (இஸ்ரோ )தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு அக்டோபர் வரை செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தும் பணியை  இஸ்ரோ நிறுத்திவைத்திருந்தது. இந்தாண்டு பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது.

நிலுவையில் உள்ள சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் உள்பட 20-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும். கொரோனா தொற்று காலத்தில் செயற்கைக்கோள்கள் செலுத்தும்பணி நிறுத்தப்பட்டிரு ந்தாலும் ஆராய்ச்சிப் பணிகள் எந்ததொய்வுமில்லாமல் நடந்தது. 2021-ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய மையில் கல்லாக அமையும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;