technology

img

ரெட்மியின் புதிய ஸ்மார்ட் டிவி - விரைவில் அறிமுகம் 

புதிய தொழில்நுட்ப தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும்  சியோமி நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவிருக்கிறது .

இதன்படி , 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவில் "ரெட்மி" பெயரில் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து பேசிய சியோமி இந்தியாவின் அதிகாரி ஈஸ்வர் நீலகண்டன் , இதுவரை இல்லாத தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி -கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது எனவும் , இந்த டீவியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் தரத்தை உணர்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார் .

இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி , 'எம்ஐ-உடன் தீபாவளி' என்கிற அறிவிப்போடு , அமேசான் விற்பனை தளத்தில் அடுத்த மாதம் அறிமுகமாகிறது . மேலும் ,  32 இன்ச் டிவி ரூ.15,999 ஆகவும் , 43 இன்ச் டிவி ரூ.25,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது .

 

;