technology

img

ஏசி-க்கு நிகரான வெள்ளை பெயிண்ட் !

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் மாணவர்கள்  இணைந்து, ஏசி-க்கு நிகரான அடர் வெள்ளை நிற பெயின்டை கண்டுபிடித்துள்ளனர். இந்த  கண்டுபிடிப்பு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் பொறியியலாளர் துறை பேராசிரியர் சியுலின் ருவான் மற்றும் அவர் மாணவர்கள்  இணைந்து, அடர் வெள்ளை நிற பெயின்டை உருவாக்கி உள்ளனர். ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெண்மை நிற பெயின்ட், சூரிய வெப்பத்திலிருந்து கட்டடத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், குளிர்ச்சியையும் கொடுக்கும் என, கூறப்படுகிறது.

இந்த பெயிண்டானது  98.1 சதவீதம் அளவுக்குச் சூரிய கதிர் வீச்சைப் பிரதிபலிப்பதுடன், மிகக் குறைந்த அளவே வெப்பத்தை உள்வாங்கிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த பெயின்டை நாம் ஒரு கட்டிடத்தில் அடிக்கும் போது எந்தவொரு ஆற்றலும் இல்லாமலேயே சுற்றுப்புற வெப்பநிலையை உள்ளே வராமல் தடுத்து , உட்புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் எனக் கூறப்படுகிறது.

அதாவது, ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டிடப்  பரப்பளவில், இந்த பெயின்டை நாம் ஒரு கோட்டிங் அடித்தாலும்கூட , 10 கிலோவாட் மின் ஆற்றலைக் கொண்ட ஏசி மூலம் என்ன குளிர்ச்சி கிடைக்குமோ, அதே அளவு குளிர்ச்சி இந்த பெயின்ட் அடிப்பதன் மூலமாகவும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.    

;