tamilnadu

img

விஐடியில் கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி

வேலூர், மே 13-விஐடி பல்கலைக் கழக உடற் கல்வித்துறை சார்பில் கோடை கால இலவச விளையாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், கராத்தே, கால்பந்து, வளை கோல்பந்து, எறிபந்து, சதுரங்கம் மற்றும் யோகாசனம் போன்ற பிரிவுகளில் தலைசிறந்த பயிற்றுனர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. 1000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த விளையாட்டுப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். நிறைவு விழாவான சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து விஐடி பல்கலைக் கழகம் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் பரிசு வழங்கினார். கோடை கால இலவச விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழாவில் இணை துணைத் வேந்தர் டாக்டர். எஸ்.நாராயணன், உடற் கல்வித் துறை இயக்குநர் டாக்டர் தியாகசந்தன், உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;