tamilnadu

img

ஒப்பந்த செவிலியர்கள் மருத்துவ செலவை அரசு ஏற்க கோரிக்கை.....

வேலூர்:
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியருக்கு மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா  இரண்டாம் அலை தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்த தமிழக முதல்வருக்கு  தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் நன் றியை தெரிவித்துக் கொள்கிறது.கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் முன்களப் பணியாளர்களாக இருந்து சிகிச்சை வழங்கிய செவிலியர்களில் பலர்  உயிரிழந்துள்ளனர்.கொரோனா சிகிச்சை பணியில் நேரடியாக அதிக நேரம் நோயாளிகளுடன் இருந்து சிகிச்சை வழங்குவது செவிலியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது போல செவிலியர்களின் குடும்பத்திற் கும் இழப்பீடு வழங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண் டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.வேலூர் மாவட்டம் வடுகன் தாங்கல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் செவிலியராக பணிபுரிந்த எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர் பணிக்கர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உடல்நலம் மோசமாக பாதிக்கப் பட்டதால் அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 
(சிஎம்சி) மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு சேர்க்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

எம்.ஆர்.பி ஒப்பந்த முறையில் அவர் பணியாற்றுவதால் அவருக்கு காப்பீடு எதுவும் கிடையாது. அவர் மிகவும் குறைவான ஊதியத்தை பெற்று வருவதால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலவு செய்வதும் மிகவும் கடினமாக இருக்கிறது.ஆகவே கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் இருந்த அவருக்கு நோய் தொற்று ஏற்பட்ட நிலையில் அவருடைய மருத்துவச் செலவை தமிழக அரசு ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.மேலும் இது போல் எமது ஒப்பந்த செவிலியர்கள் பலர் நோயினால் பாதிக்கப்படும் போது அவர்கள் சொந்த செலவில் மருத்துவ சிகிச்சை பெற வேண் டிய நிலை உள்ளது.குறைவான ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இது மிகவும் சிரமமாக இருப்பதால் தாங்கள் தயவுகூர்ந்து எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் அஷ்வினி, இணைசெயலாளர் சுஜாதா, மாநில துணைத்தலைவர் கலையரசி ஆகியோர், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சென்னை யில் அவரின் இல்லத்தில் சந்தித்து மனு அளித்தனர்.அதில்,  தமிழக முதல்வர் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது போல செவிலியர்களின் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்க தமிழக மருத்துவம் மற்றும் மக் கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

;