tamilnadu

img

விழுப்புரம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

விழுப்புரம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரத்தில் இருந்து இன்று (நவ.8) மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 4.05 மணிக்குப் புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்.07602), அடுத்த நாள் காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

மறுமார்க்கமாக. செகந்திராபாத்தில் இருந்து வரும் 14ஆம் தேதி இரவு 7.40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் வரும் சிறப்பு ரயில், அடுத்த நாள் மதியம் 1.05 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.