tamilnadu

img

காவலரின் மனைவியை தாக்கி வழிப்பறி செய்த பாஜக நிர்வாகி கைது...

விழுப்புரம்:
விழுப்புரம் அருகே மரகதபுரத்தைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார். இவரது மனைவி கவியரசி (31). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தற்போது கவியரசி, கர்ப்பிணியாக உள்ளார். இவர் கடந்த 8 ஆம்தேதி செஞ்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தை, கணவர் முத்துக்குமார் உடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கண்டியமடை கிராம சாலை அருகே சென்றபோது, கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் மருத்துவ அட்டையை கவியரசி, வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததால் கவியரசியையும், குழந்தையையும் அங்குள்ள ஒரு மரத்தின் நிழலில் நிற்க வைத்துவிட்டு மருத்துவ அட்டையை எடுத்துவருவதற்காக முத்துக்குமரன் மட்டும் வீட்டிற்கு சென்றார்.

அந்த சமயத்தில் கண்டியமடை கிராம சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர்,திடீரென கவியரசியை இரும்புகம்பியால் தலையில் தாக்கியதும்நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். அவர் அணிந்திருந்த 11 பவுன் நகையை வழிப்பறி செய்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார்.இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த கவியரசியை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகராம்பட்டு கிராம பகுதியை சேர்ந்த அறிவழகன் (39) என்பதும், அவர் நெல்லிக்குப்பம் நகர பாஜக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டார். அப்போது போலீசாரின் விசாரணையில் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிய போது,தவறி விழுந்து வலது கையில் எலும்புமுறிவு ஏற்பட்டு அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் அவர் திருட்டு தொழிலுக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள தாலி செயின் உள்ளிட்ட 88 கிராம் அதாவது11 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டன.கைது செய்யப்பட்டுள்ள பாஜகநிர்வாகி மீது விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் 28 திருட்டு, வழிப்பறி,கொள்ளை வழக்குகள் நிலுவை யில் உள்ளதாக போலீசார் தெரி வித்தனர்.

;