tamilnadu

img

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

மேட்டூர்,நவ.23- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்து 6 ஆயிரத்து 943 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. சனிக் கிழமையன்று நீர்வரத்து குறைந்து 6 ஆயிரத்து 943 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவே நீடிக்கிறது.