tamilnadu

img

மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா... மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மும்பை
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பிற்போக்கான செயலால் கடந்த 20 நாட்களாக மகாராஷ்டிரா அரசியல் களத்தில் எரிந்த நெருப்பைக் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணியுடன் அணைத்தனர். 

இந்த கூட்டணிக் கட்சிகளின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சிவசேனா கட்சி உருவான சிவாஜி பூங்காவில் நாளை (நவம்பர் 28-ஆம் தேதி) பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் முதல்வர்களுக்கும் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.  

;