‘மீண்டும் வெல்வோம்; திமுக 2.0 ஆட்சி அமைப்போம்!’
சென்னை, பிப். 20 - 16-ஆவது தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையின் 8-ஆவது கூட்டத் தொடரின் இறுதி நாளான வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 20) அன்று, முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிறைவுரை யாற்றினார். ஐந்தாண்டு ஆட்சியின் சாதனை களை மனநிறைவுடன் மதிப்பிட்ட அவர், இரண்டு மாதத்தில் நடை பெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை உறு தியான குரலில் வெளிப்படுத்தினார். கவலையுடன் தொடங்கி, மனநிறைவுடன் நிறைவு! 2021-இல் முதல்வர் பதவியேற்ற நாளை நினைவு கூர்ந்த மு.க.ஸ்டா லின், “வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா?” என்ற கவலை அன்று தன்னை ஆட் கொண்டதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். முந்தைய அரசின் மோசமான நிர்வா கச் சுமையையும், ஒத்துழைக்காத ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்ச னையையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு ஆட்சிக்கு வந்ததாக நினைவுகூர்ந்த அவர், இன்று அந்த கவலை முழுமையான மன நிறைவாக மலர்ந்திருப்பதாக தெரிவித்தார். “எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாகச் செய்தாகவே நான் நினைக்கிறேன்” என்று அவர் தெரி வித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வும், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையும், கலை ஞரின் சிறந்த நிர்வாகமும் தொலை நோக்குப் பார்வையும் — இந்த மூன்று தூண்களையும் ஒருங்கிணைத்த திமுக அரசை கடந்த ஐந்தாண்டில் நடத்திக் காட்டியதாக முதலமைச்சர் தெரிவித்தார். “ஆராய்ந்து முடிவெடுக்கும் பண்பு, அதனால் விளையும் பயன், பயன் பெற்றவர்களின் உயர்வு, உயர் வினால் உண்டாகும் வளம் — இதுவே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப் படை” என்று அவர் விளக்கினார். மேலும் உழைப்பதற்கான ஊக்கத்தைப் பெற்றுள்ளேன். வரலாற்றுச் சிறப்புமிக்க முதல்வர் இருக்கை யில் எனக்கு முன்னர் அமர்ந்த பலரும் இன் றைக்கு நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர்கள் அனைவருமே போற்றப்படக் கூடிய வர்கள்தான். அவர்கள் ஆட்சிச் சக்கரத்தை உயர்த்திப் பிடித்தது மகத்தானது. தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, கால நேரம் பாராது உழைத்திடும் பண்பு, தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன், எதையும் தாங்கும் வல்லமை, எல்லோரிடத்திலும் அன்பு, கருணை யோடு இருத்தல், கடமை தவறாமை, ஊக்கத் தோடு செயலாற்றுதல் ஆகிய பண்புகள் நிச்சயம் தேவை. இதனையே நானும் கடைப்பிடித்திருக் கிறேன். இந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தி னால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இன்றைக்கு இன்னும் வலிமை பெற்று, தமிழ் நாட்டை இன்னும் ஏற்றம் பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றுள்ளேன். நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் எனும் ஊக்கத்தையும், எதனையும் எதிர்கொள் ளும் வல்லமையையும் பெற்றுள்ளேன். சுயமரியாதையை சீண்டினால் எதிர்க்குரல் கொடுப்பேன் ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறை யில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது. தமிழர்களுடைய சுயமரியாதை எள் முனை யளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தா லும், எதிர்க்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக நான் இருப்பேன். தமிழர் பண்பாட்டை மனதில் கொண்டு, ஆளுநருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் தன் தொகுதிகளாகவே கருதி செயலாற்றியதாக முதலமைச்சர் உணர்வுப் பூர்வமாக தெரிவித்தார். மக்களின் ஒத்துழைப்புடன் திட்டங்கள் நிறைவேற்றம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், ஊழியர்களுக்கான உறுதியான ஓய்வூ தியம் என குழந்தைகள் முதல் முதியோர் வரை, விவசாயிகள் முதல் திருநர்கள் வரை அனைத்து சமுதாயத்தினருக்கும் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டதை அவர் எடுத்துரைத்தார். “இதற்கு நான் மட்டுமா காரணம்? இல்லவே இல்லை! ஒட்டுமொத்த தமிழர்களும் என் கை யோடு கைசேர்த்து உதவினார்கள்” என்று அவர் தன் வெற்றியை மக்களுக்கே சமர்ப்பித்தார். “இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத் திருக்கிறேன். இன்னும் உழைக்கக் காத்திருக் கிறேன்” என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபட அறிவித்தார். ‘2 மாதத்தில் மீண்டும் வருவோம்’ தனது நிறைவுரையை உரத்த நம்பிக்கை யில் கொண்டு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஐந்து நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப் பெற்று, இந்த ஆண்டிற் கான இடைக்கால நிதிநிலை அறிக்கையும், வேளாண்மை இடைக்கால நிதிநிலை அறிக்கை யும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது சிறப்பான விவாதம், பதிலுரை வழங்கப் பெற்றுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகி யோர் சிறப்பான அறிக்கையையும் பதிலுரை யையும் வழங்கியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியை, அடுத்த இரண்டு மாதத்தில் மீண்டும் வந்து, நிச்சயம், இன்னும் கூடுதலாக, வேகமாகத் தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களைப் போலவே எனக்கும் இருக்கிறது. “நாளைய தமிழ்நாடு நம்மை வரவேற்கும்” “இந்த ஐந்தாண்டு அனுபவத்தினால் இன்று நான் இன்னும் வலிமை பெற்றுள்ளேன். நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும். நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய திமுக 2.0 ஆட்சி, எங்கள் சாதனை களை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்” என்று அறிவித்தார். “உறுதியாகச் சொல்கிறேன் — மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங் களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்” என்று அவர் உரத்த குரலில் முழங்க, பேரவை பலத்த கைத்தட்டலில் அதிர்ந்தது.