tamilnadu

img

பாரம்பரிய கட்டிடங்களை நினைவுகூரும் நடைபயணம்

சென்னை, செப். 26- உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னை  தலைமைச் செயலகத் லுள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாராம்பரிய கட்டிடங்கள் மற்றும் மாளிகை களை நினைவுக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற “பாராம்பரிய நடைபயணத்தை”  சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஞாயிறன்று துவக்கி வைத்தார். உலக சுற்றுலா  தினம் உலக நாடுகளால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27ஆம்  நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுலா அமைப்பு 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாளினை உலக  சுற்றுலாத்தளமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் அறிவிக்கப்பட்டு உலக  சுற்றுலா  தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த  ஆண்டு, “சுற்றுலாவும் அதன் உள்ளடங்கிய வளர்ச்சி யும்” என்கிற கருப்பொருளில் இந்த தினம் கொண்டா டப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை தலைமைச் செய லகத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பாராம்பரிய கட்டிடங்கள் மற்றும் மாளிகைகளை நினைவுக் கூறி  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற பாராம்பரிய நடை பயணம் நடைபெற்றது. இந்த நடைபயணமானது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வாட்டர் கேட் தொடங்கி சட்ட மன்ற தலைமைச் செயலகம், கிங்ஸ் பேரக், க்ளைவ்  மாளிகை, கார்ன்வாலிஸ் க்யூபோலா, கோட்டை அருங்காட்சியம், வடக்கு தெரு, பரேடு ஸ்கொயர்,  புனித மேரி ஆலயம், வாலாஜா கேட், தூய தாமஸ்  கேட், தூய தாமஸ் தெரு, புனித ஜார்ஜ் கேட் வரை  நடைபெற்றது.

;