tamilnadu

img

நிர்வாகச் சீர்கேடு, முறைகேட்டில் வாலிநோக்கம் உப்பு நிறுவனம்

அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் தொழிலாளர்கள்

இராமநாதபுரம், செப்.19 - ‘‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’’ என்று பழ மொழி உண்டு. ஆனால், தமிழகத்தின் ஒரே உப்பு நிறு வனமான வாலிநோக்கத்தில், உப்பளங்களில் பணி யாற்றும் தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பு. சட்டப் பாதுகாப்பு, அடிப்படை வசதி, மருத்துவ வசதி ஏதுமின்றி இன்றைக்கும் பணியாற்றி வருகிறார்கள். 1975 ஆம் ஆண்டு, அன்றைய முதல்வராக இருந்த  கலைஞர், பின் தங்கிய இராமநாதபுரம் மாவட்டத்தை  வளப்படுத்த வேண்டும், கடலைப் பயன்படுத்தி உப்பு நிறுவனத்தை தொடங்கினால் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறுவார்கள் என்ற உயர்ந்த நோக்கத்துடன்  தொடங்கினார். ஆனால் கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் கமிஷன், சுயநலம், நிர்வாகச் சீர்கேடு ஆகியவற்றால் உப்பு நிறுவனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

சீசன் தொழிற் சாலையாம்!

ளைவிக்கப்பட்டது. தற்போது 5,540 ஏக்கரில் விளைக்கப்படுகிறது. 1,300 முதல் 1,500 தொழி லாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த நூறு பணியாளர்களைத் தவிர வேறுயாரும் நிரந்தரமில்லை. கேட்டால் இது  ஒரு பருவகாலத் தொழிற்சாலை (சீசன் தொழிற்சா லை) என வியாக்கியானம் செய்துள்ளது முந்தைய அதிமுக அரசு.  முந்தைய, உப்பளத்தில் அரசு மேற்கொண்டு வந்த பல பணிகள் டெண்டர் விடப்பட்டு, கமிஷன் அடிப்படையில் வேலை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் டன் முதல் ஒன்றரை லட்சம் டன்  வரை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் டன் உற்பத்தி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் சுமார் 97 ஆயிரம் டன் உற்பத்தி நடைபெற்றுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு அம்மா உப்பு-திட்டத்திற்கும், சத்துணவு, அங்கன்வாடி மையத் தேவைக்கும் அனுப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி தூத்துக்குடியில் உள்ள பெரிய உப்பு நிறுவனங்கள் இங்கு உப்பைப் பெற்றுக்கொள்கின்றன. அயோடின் உப்பு அறிமுகம் செய்த பின்பு, உப்பளங்களை மெல்ல. மெல்ல. டாடா நிறுவனத் திடம் தாரை வார்க்க முயற்சி நடைபெற்றுள்ளது. தொழிலாளர்கள் போராட்டத்தால் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் ரூ.16 கோடி வரை சேமிப்பு இருந்தது. தற்போது நிலை தலை கீழாக உள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான பாக்கி  ரூ.10 கோடி வர வேண்டியுள்ளது. இந்தத் தொகை தற்போது அதிகரித்திருக்கும். விற்ற உப்புக்கான பண த்தைக் பெறுவதில் அதிகாரிகளுக்கு அக்கறை யில்லை. கமிஷன் பெற்றுக்கொண்டு குறைந்த விலைக்கு உப்பை விற்பதும் தொடர்கிறது. உப்பளத்தில் தொடர்ந்து பணியாற்றும் தொழி லாளர்கள் கண்பார்வை குறைபாடு, தோல் வியாதி கள், சிறுநீரகக் கோளாறு, கல் அடைப்பு போன்ற நோய்களால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இவர்களது உயிர்ப் பாதுகாப்பிற்கு உப்பு நிறுவனம் எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை. நோயால் பாதிக்கப்பட்டால் தொழிலாளி நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும்.

ஒரு ஆறுதல்...

தொழிலாளி யாராவது உயிரிழந்துவிட்டால் ஒரு ரோஜாப்பூ மாலையும், ரூ.1,000-ஆம் மட்டுமே அரசு  உப்பு நிறுவனம் கொடுத்து வந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி த.உதயச்சந்திரன் இந்த நிறுவனத்தில் பொறுப்பு வகித்த காலத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த சு.வெங்கடேசன் (தற்போது மதுரை மக்களவை உறுப்பினர்) இந்த நிறுவனத்தை பார்வையிடச் சென்ற போது தொழி லாளர்களின் வாழ்க்கையைப் பார்த்து அதிர்ச்சி யடைந்து த.உதயச்சந்திரனிடம் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது தொழிலாளி யாராவது இறந்துவிட்டால் அந்தத் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் கிடைக்கிறது 

என்பதுதான் ஆறுதலான விஷயம்.

தொழிலாளர்களுக்குக் கூலியும் பெரிய அளவிற்கு வழங்கப்படவில்லை ஆண்களுக்கு ரூ.418, பெண்களுக்கு ரூ.416. நோய்வாய்ப்படாமல் இருந்தால் இவர்களுக்கு இதுவும் கிடைக்கும். உப்பு  உற்பத்தி இல்லாத காலத்தில் விவசாய வேலை களுக்குச் சென்றால்தான் பிழைப்பு. தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை. கழிப்பறை, குடிநீர்,  மருத்துவம் ஏதும் இல்லை. தொழிலாளிகள் பாட்டிலில் கொண்டு செல்லும் தண்ணீரைத் தான் அவ்வப்போது குடிக்கின்றனர். தண்ணீர் தீர்ந்து விட்டால் அவ்வளவு தான். வாலி நோக்கத்தில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தாலும் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் தொழிலாளர்கள் 52 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இராமநாதபுரத்திற்கோ, அல்லது சாயல்குடிக்கோ தான் செல்ல வேண்டும். இவர்களை அழைத்துச் செல்வதற்கும் வாகனம் இல்லை. அந்த வாகனம் அதிகாரிகள் பயன்பாட்டில் உள்ளது. அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் படும் சிரமங்கள் மற்றும் அரசு செய்ய வேண்டியது குறித்து தமிழ்நாடு உப்புத் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டத் தலைவர் பச்சைமால், இராமநாதபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் கூறுகையில், “தொழிலாளர்கள் கூறுவது அனைத்தும் 100 சதவீதம் உண்மை.

முதல் தீர்வாக தொழிற்சாலை மேம்பாட்டிற்காக வருடத்திற்கு ரூ.5  கோடி அரசு ஒதுக்க வேண்டும். உப்புப் பாத்தி களை தொடர்ந்து பாதுகாத்தால், வருடாந்திர உற்பத்தி இலக்கைத் தாண்ட வாய்ப்புள்ளது. உற்பத்தி நிறுவனம் வாலிநோக்கத்தில்; ஆனால் தலைமை அலுவலகமோ சென்னையில் இதனால் தேவையற்ற செலவினங்கள் ஏற்படுகிறது. நிர்வாக அலுவலகத்தை இராமநாதபுரத்திற்கு மாற்ற வேண்டும். உப்புத் தொழிலாளர்களுக்கு 300 தொகுப்பு வீடுகள் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டது. அவை இடிந்து தரைமட்டமாகிவிட்டன. உப்பு சுத்தி கரிப்பிற்காக ரூ.2,25 கோடியில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டது. அது பயன்பாட்டிற்கே வரவில்லை. உப்புத் தொழிலாளர்களுக்கு அரசு பென்சன் வழங்க  வேண்டும். தொழிலின் நிலை அறிந்து மருத்து உதவி கள் அளிக்க வேண்டும். சீசன் தொழிற்சாலை எனக் கூறி தொழிலாளர்களுக்கு பணிக்கொடையை குறைக்கக் கூடாது. சர்க்கரை ஆலைகளில் வழங்கு வது போல் 15 நாள் பணிக்கொடை வழங்க வேண்டும். நிர்வாகச் சீர்கேடு குறித்து தமிழக அரசு  முழு விசாரணை நடத்தி, முன்னாள் முதல்வர் கலை ஞர் எந்த நோக்கத்திற்காக உப்பு நிறுவனத்தை தொடங்கினாரோ அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்” என்றனர்.

-ச.நல்லேந்திரன்


 

 

;