tamilnadu

img

சிபிஎம் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக வீ.மாரிமுத்து தேர்வு

நாகப்பட்டினம், நவ.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளராக வீ.மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டார். நாகை மாவட்ட இருபத்தி மூன்றா வது மாநாடு திருமருகல் வர்ஷாமஹாலில் 26,27 தேதி களில் நடைபெற்றது. மாநாட்டு தொடக்க நிகழ் வாக சந்தப்பேட்டையிலி ருந்து எழுச்சிகரமான பேரணி நடைபெற்றது. தோழர் ஏ.வி. முருகையன் நுழைவாயி லில் பேரணி நிறைவுபெற் றது. தோழர் ஜீ.வீரையன் நினைவு அரங்கத்தில் மாநாடு நடைபெற்றது. முதுபெரும் தோழர் எம்.நடராஜன் மாநாட் டுக் கொடியை ஏற்றி வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. சுபாஷ்சந்திர போஸ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். 

மாநில செயற்குழு உறுப் பினர் என்.குணசேகரன் மாநாட்டு துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வீ. மாரிமுத்து வேலை அறிக்கை யை சமர்ப்பித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் வாழ்த்துரை வழங்கி னார்.

வடகிழக்கு பருவ மழை யின் காரணமாக பாதிக்கப் பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்க ருக்கு 30 ஆயிரமும்,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 10 ஆயிரமும் உடனடியாக நிவாரணமாக வழங்க வேண் டும்.நாகை மாவட்ட கட லோரக் கிராமங்களில் விளை விக்கப்படுகின்ற நிலக் கட லைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட் டத்தில் வேலைநாளை 100 நாளில் இருந்து 200 நாளாக உயர்த்த வேண்டும். ஊதியம் 200 ரூபாயை உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும். பெண் குழந்தை களுக்கு ஏற்படும் பாலியல் சுரண்டலில் இருந்து குழந் தைகளை பாதுகாக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் முப்பத்தி மூன்று மாவட்ட குழு உறுப்பி னர்களும் ,வீ.மாரிமுத்து, வீ.பி.நாகைமாலி, வீ.சுப்ர மணியன்,கோவை.சுப்பிர மணியன்,எம். முருகையன், டி.லதா, ப.சுபாஷ் சந்திர போஸ், ஏ.வேணு, வீ. அம்பிகாபதி, என்.எம்.அபுபக்கர் ஆகிய மாவட்ட செயற்குழு உறுப்பி னர்களும் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டச் செயலா ளராக வீ.மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான பெ.சண்முகம் நிறைவுரை ஆற்றினார்.

;