tamilnadu

img

ஆளுநர் மாளிகை முற்றுகை

சென்னை, அக். 27 - ‘நீட்’ விலக்கு சட்ட மசோதாவில் கையெழுத்திடக் கோரி புதனன்று சென்னையில் ஆளுநர் மாளிகையை மாணவர்கள் முற்றுகையிட்டனர். மாநில உரிமை, கூட்டாட்சி மற்றும் சமூக நீதியை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு ‘நீட்’ தேர்வை கொண்டு  வந்துள்ளது. தமிழகத்தில் மருத்துவச் சேவையும், மருத்துவக் கல்வியும் ஒன்றோடொன்று இணைக்கப் பட்டுள்ளன. ‘நீட்’ தேர்வால் இந்த மருத்துவக் கட்டமைப்பு சிதையும் நிலை உருவாகியுள்ளது. நெறியற்ற தேர்வு முறையால் அரசுப்பள்ளி மாண வர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ‘நீட்’ பயிற்சி நிறுவனங்களும் புற்றீசல் போல் பெருகி, மாணவர்களைச் சுரண்டுகின்றன. ஆகவே, மருத்துவ இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர, ‘நீட்’ தேர்வி லிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை அரசு நிறை வேற்றியது. அதை ஆளுநரின் ஒப்புத லுக்காக அனுப்பி வைத்து, 45 நாட் களை கடந்தும் அவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, மசோதா விற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, அதை குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்ப வேண்டும். ஒன்றிய அரசு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (அக்.27) இந்தியா முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒருபகுதியாக சென்னை யில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சின்ன மலையில் இருந்து சங்கத்தின் அகில  இந்திய பொதுச் செயலாளர் மயூக்  பிஸ்வாஸ் தலைமையில் ஊர்வல மாக முற்றுகையிடச் சென்ற மாண வர்களை தடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப் பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டிருந்த மாணவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து போராட்டம் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து  இந்திய மாணவர் சங்க போராட்ட த்திற்கு திமுக இளைஞர் அணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ  நன்றி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில்,  நீட்தேர்வை ஒழிக்க திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஒன்றிய அரசு ஏற்க வலி யுறுத்தி தேசிய அளவில் போராடும் இந்திய மாணவர் சங்கத்திற்கு  நன்றி. வாழ்த்து எனத் தெரிவித்துள்ளார். ஒரு மாநில அரசின் சட்டம் நிறைவேற நாடு  முழுவதும் போராட்டம். தமிழ்நாடு மட்டுமல்ல நீட்டை இந்தியாவே எதிர்க் கிறது. மாணவர் லட்சியம் வெல்வது நிச்சயம் எனவும் அவர் கூறியுள்ளார். மாணவர் சங்க போராட்டத்திற்கு பொது பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேராசிரியர் அனில் சடகோபால் ஆகியோரும் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.

;