மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் செவ்வாயன்று (நவ.15) தொடங்கியது. மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டம் தொடர்ந்து வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.