tamilnadu

img

மூச்சிலும் பேச்சிலும் கலந்த மூன்றெழுத்து விபிசி

மூச்சிலும் பேச்சிலும் கலந்த மூன்றெழுத்து  விபிசி

அந்த மூன்றெழுத்து தொழிலாளர்களின் மூச்சி லும் பேச்சிலும் கலந்திருக்கும்!  தோன்றாத் துணைவனான நீ தமிழகத் தொழிலாளர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ளாய்!  சமூக விரோதிகளின் தாக்குதலுக்குள்ளாகி மீண்டு வந்த பலவீன நிலையிலும் நீ எஞ்சிய ரத்தமும் உங்களுக்கே என்றது என்றென்றும் எங்கள் நினைவிலிருக்கும்!  புரட்சியின் பூமியாம் மாஸ்கோவில் புகழ் மே தின அணிவகுப்பைக் கண்ட மகிழ்ச்சியிலே அங்கு காலமானாய்... பாசிசத்தை முறியடித்த மண்ணில் பாசத் தலைவா நீ பதியமானாய்!  பாட்டாளி மக்களின் விடியலுக்கே உன் பாதையில் அணிவகுப்போம்!

 மே 8 தோழர் வி.பி.சிந்தன் நினைவு நாள்