• இது பள்ளி / கல்லூரி செல்லும் இருபால் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவியல் மாதம். ஆனால் இவ்வாண்டு இதனை அரசியல் மாதமாக கருதுவோரும் உண்டு.
ஆனால் எது நிரந்தரம் ?
இம்மாதத்தில் தான்
கீழ்க்கண்டவர்கள் பிறந்தார்கள்.
கோபர்நிகஸ்
பிறந்த நாள். 19/2/1473.
நினைவுநாள் 24/5/1543.
கலிலியோ
பிறந்த நாள். 15/2/1564.
நினைவுநாள் 8/1/1642.
சார்லஸ்
டார்வின்
பிறந்த நாள் 12/2/1809.
நினைவுநாள் 19/4/1882.
தாமஸ் ஆல்வா எடிசன்
பிறந்த நாள் 11/2/1847.
நினைவுநாள் 18/2/1931.
இன்னும் பல அறிவியல் அறிஞர்கள் பிறந்திருக்கலாம் இம்மாதத்தில்.
இம்மாதம் (தமிழில் தை 19 முதல் – மாசி 16 வரை வருகிறது) பிப்ரவரி முதல் தேதி செவ்வாயில் பிறந்து திங்கள் அன்று - முடிவடைகிறது.
முடியும் நாள் 28/2 தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது?
இது சர்.சி.வி.இராமன்
ராமன் விளைவு (ஒளிச்சிதறல்) கண்டுபிடித்த நாள்
குறிப்பு: இனி இப்பகுதியில் வெளிவரும் (‘துளிர்களின் கைவண்ணம்’) சிறந்த படங்களுக்கு பள்ளி விலாசம் அல்லது வீட்டு விலாசம் அஞ்சல் குறியீட்டு எண் உடன் இருப்பின் அவர்களுக்கு ஒரு அறிவியல் புத்தகம் பரிசாக உங்களைத்தேடி வரும். (அது பள்ளி விலாசமாக இருப்பின் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக )
- ஏ.சி.எஸ்.மணி