tamilnadu

img

பாஜகவை கைவிட்டார் நிதிஷ்

பீகாரில் எதிர்க்கட்சிகளைக் கொண்ட  புதிய அரசு அமைகிறது

பாட்னா, ஆக. 9 - பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளைக் கொண்ட புதிய அரசு அமைகிறது. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து, புதிய கூட்டணியை அமைத்துள்ளார். இதுவரை பாஜக ஆதரவுடன், தான் வகித்து வந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை பீகார் ஆளுநர் பாகு சவு கானிடம் வழங்கி புதிய ஆட்சி  அமைப் பதற்கு உரிமைகோரியுள்ளார். இதன்மூலம் பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளைக் கொண்ட அரசு அமைகிறது. இங்கு ஆளும் கட்சி யாக இருந்த பாஜக ஒரே நாளில் தனித்து விடப்பட்டுள்ளது. இது பாஜக-வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆரம்பம் முதலே அவமதிப்பு

பீகாரில் நிதிஷ்குமார் தலைமை யிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்எல்ஏ-க்களும், பாஜக-வுக்கு 77 எம்எல்ஏ-க்கள் இருக்கும் நிலையில், 2020 தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஐக்கிய ஜனதா தளத்திற்கே முதல்வர் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது. நிதிஷ்குமார் முதல்வராக இருந்து வந்தார். ஆனால், பீகாரில் சட்டமன்ற சபாநாயகர் தேர்வு முதலே நிதிஷ் குமாருக்கும், பாஜகவுக்கும் இடை யிலான மோதல் துவங்கி விட்டது. தன்னுடைய கட்சி எம்எல்ஏ-வை சபா நாயகர் ஆக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் விரும்பினார். ஆனால் பாஜக சார்பில் விஜய் குமார் சின்ஹா சபாநாயகர் ஆனதை அவரால் ஏற்க முடியவில்லை. இந்த அதிருப்தி பின்னாளில் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. 

விமர்சித்த சபாநாயகர்

முதல்வர் நிதிஷ்குமாருக்கும், சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிதிஷ் குமாரை, விஜய் குமார் சின்ஹா கடுமையாக விமர்சித்ததும் நடந்தது. ஒருகட்டத்தில் பாஜக-வைச் சேர்ந்த 16 அமைச்சர்களும் முதல்வர் நிதிஷ்குமாரை மதிப்ப தில்லை என்ற அளவிற்கு நிலைமை போனது. பாஜக அமைச்சர்கள் தனியாகவே செயல்பட்டு வந்தனர்.  இன்னொரு புறத்தில், நிதிஷை கடுமையாக விமர்சிக்கும் லோக் ஜன சக்தியின் தலைவர் சிராக் பஸ்வா னுக்கு பாஜக மறைமுக ஆதரவு கொடுத்தது. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் சரிவுக்குக் காரணமே பஸ்வான்தான் என்ற நிலையில், அவரை வைத்து நிதிஷ்குமாரை பாஜக தொடர்ந்து கடுப்பேற்றியது.

ஒன்றிய அமைச்சர்  பதவி மறுப்பு

அடுத்ததாக ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒன்றிய அமைச்சரவை யில் ஒரு இடம் மட்டுமே பாஜக வழங்கியது. 2 ஒன்றிய அமைச்சர் பதவிகளையாவது வழங்க வேண்டும் என்ற நிதிஷ் குமாரின் கோரிக்கையை கடைசிவரை பாஜக ஏற்கவில்லை. 

அவமானத்திற்கு பதிலடி

இந்த சம்பவங்கள் முதல்வர் நிதிஷ்குமாருக்கு தொடர் அவமான மாக அமைந்தது. இதனால் பாஜக மீது கோபமடைந்த  நிதிஷ் குமார், பாஜகவுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். தனது கட்சி சார்பில்  ஒன்றிய அமைச்சராக இருந்த ஆர்.சி.பி. சிங்கின் எம்.பி. பதவிக்காலம் முடிந்த நிலையில், அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்காதது  மட்டுமன்றி, ஒன்றிய அமைச்சரவை யில் ஐக்கிய ஜனதாதளம் இடம்பெறாது என்று அறிவித்தது. 

இறங்கி வந்த அமித்ஷா 

இதையடுத்து, 2024 மக்களவைத் தேர்தலிலும் ஐக்கிய ஜனதாதளம் உடனான கூட்டணி தொட ரும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சமாதான முயற்சியில் இறங்கினார். ஆனால், 2024 தேர்தலில் தன்னை வைத்து கூடுதல் எம்.பி.க்களை பெறுவதற்கான தந்திரமே இது என்பதை உணர்ந்த நிதிஷ்குமார், அமித்ஷா பேச்சுக்கு பதிலளிக்கவில்லை. 

பலிக்காத தந்திரம்

மாறாக, ஒன்றிய அரசு அழைப்பு விடுத்த 4 நிகழ்ச்சிகளை அவர்  புறக்கணித்தார். குடியரசுத் தலைவ ராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபச்சார விழா, புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பதவி ஏற்பு விழா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் உள்ளிட்ட 4 நிகழ்ச்சிகளுக்கு நிதிஷ்  குமார் செல்லவில்லை.  அப்போதே நிதிஷ்குமார் பாஜக  கூட்டணியில் இருந்து விலகிவிடு வார் என்று பேச்சுக்கள் எழுந்தன. கட்சியை உடைக்க முயற்சி இதனிடையே, ஒன்றிய அமைச்ச ராக இருந்தவரும், ஐக்கிய ஜனதா  தளம் தேசியத் தலைவருமான ஆர்.சி.பி. சிங்கை தங்கள் பக்கம்  வளைத்த பாஜக, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்தது போல, பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியையும் உடைப்பதற்குத் திட்ட மிடுவதாக செய்திகள் கசிந்தன. 

அதிர்ச்சியடைந்த நிதிஷ்குமார்

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் பாஜக தனது  அஸ்திவாரத்திலேயே கைவைப் பதை அறிந்த நிதிஷ்குமார், முடிவெ டுத்தே ஆகவேண்டிய நிலைக்கு தள்  ளப்பட்டார். பாஜக கூட்டணியை முறிப் பது தொடர்பாக ஆலோசனைகளில் இறங்கினார்.  அவ்வாறு பாஜக கூட்டணியை  முறிக்கும் பட்சத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளு டன் கைகோர்ப்பதற்கான சாத்தி யங்கள் குறித்தும் பரிசீலித்து வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யுடனும் இதுதொடர்பாக அவர் பேசி வந்தார். 

மகாபந்தன் கூட்டணி ஆதரவு

இதனிடையே, “பாஜக கூட்டணி யிலிருந்து நிதிஷ் குமார் வந்தால் வர வேற்று நாங்கள் ஆதரவளிப்போம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் சர்மா அறிவித்தார். “பாஜக-வுடனான உறவை நிதிஷ்குமார் கை விட்டால் அவரது கட்சியுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக உள் ளோம். பாஜகவுக்கு எதிராக போரா டுவதில் எங்கள் கட்சி உறுதியாகவே உள்ளது” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் துணைத்தலைவர் சிவானந்த் திவாரி ஆதரவை உறு திப்படுத்தினார். மேலும் 12 எம்எல்ஏக்  களை கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் ஐக்கிய ஜனதா தளத்தை ஆதரிக்கத் தயார் என்று அறிவித்தது.

கூட்டணி முறிந்தது

இது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கட்சி தனது  கட்சி எம்எல்ஏ-க்களை அழைத்து தனி யாக ஆலோசனை நடத்தத் தொடங் கியது. இதேபோல நிதிஷ்குமாரும் தனது கட்சி எம்எல்ஏ-க்களுடன் செவ்வாயன்று தீவிர ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சிகளின் ‘மகா பந்தன்’ கூட்டணியும் லாலு இல்லத்  தில் கூடி ஆலோசித்தன. நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி  அமைக்க ஆதரவு தருவது என அப் போது முடிவு செய்தன. இதனிடையே, தனது கட்சி எம்எல்ஏ-க்களின் கூட்ட முடிவில், ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்  டணி முறிந்து விட்டதாகவும் முறைப்  படி நிதிஷ்குமார் அறிவித்தார். ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களை பாஜக அவமதித்து வந்ததாகவும், தொடர்ந்து தங்கள் கட்சியை பல வீனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் நிதிஷ்குமார் குற்றம் சாட்டினார்.

ஆளுநரிடம் ராஜினாமா கடிதம்

அத்துடன், ஆளுநர் மாளிகைக் குச் சென்று தனது ராஜினாமா கடி தத்தை அளித்த நிதிஷ்குமார், புதிய  அரசு அமைப்பதற்கு ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரி கள் கட்சிகள் உட்பட 160 எம்எல்ஏ-க்கள்  கையெழுத்திட்ட ஆதரவுக் கடி தத்தையும் ஆளுநர் பாகு சவுகானி டம் வழங்கினார். 

‘மகாபந்தன்’ தலைவரான நிதிஷ்குமார்

பின்னர் லாலு பிரசாத் இல்லத்திற் குச் சென்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வியை, நிதிஷ்  குமார் சந்தித்தார். புதிய அரசு  அமைப்பது குறித்து இரண்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தி னர். இதில், ‘மகாபந்தன்’ கூட்டணி யின் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தேஜஸ்வி-யுடன் ஆளு நர் மாளிகைக்குச் சென்ற நிதிஷ் குமார், அங்கு ஆளுநர் பாகு சவு கானைச் சந்தித்து புதிய அரசு அமைப்  பதற்கு முறைப்படி உரிமை கோரினார். இதன்மூலம், பீகாரில் நிதிஷ்  குமார் தலைமையில் எதிர்க்கட்சி களின் கூட்டணி அரசு அமைவது உறு தியாகி இருக்கிறது. புதிய ஆட்சி யில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவியுடன் உள்துறை இலாகாவும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

பெரும்பான்மையை விட  33 இடங்கள் கூடுதல்

243 இடங்களைக் கொண்ட பீகார்  சட்டப்பேரவையில் பெரும்பான்மை எண்ணிக்கைக்கு 127 இடங்கள் தேவை. தற்போதைய நிலையில் ஐக்  கிய ஜனதாதளம் கட்சிக்கு 45 இடங்  கள், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு  80 இடங்கள், காங்கிரசுக்கு 19 இடங் கள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு  12 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 இடங்கள் என மொத்  தம் 160 இடங்கள் என்ற பெரும் பான்மை உள்ளது. பாஜகவுக்கு 77 இடங்கள் உள்ளன.

 







 

;