tamilnadu

கடவுளின் ராஜ்யம் - சுபொஅ

--

கடவுளின் ராஜ்யம் சமீபத்திருக்கிறது
கண்ணெதிரே சாட்சியங்கள் வரிசை கட்டுகின்றன

சாட்சியம் ஒன்று
வேதப்புரத்துக்கு ராஜா யார்?
தாய் தந்தையருக்கு பிறக்காத தெய்வக் குழந்தை! 

சாட்சியம் இரண்டு
வேதபுரத்துக்கு நியாயதிபதி யார்?
கடவுள் சொல்ல சொல்ல தீர்ப்பு எழுதுபவர்! 

சாட்சியம் மூன்று
வேதபுரத்துக்கு குடவோலை அதிபதி யார்?
கடவுள் ராஜா கண்ணசைவில் காரியமாற்றுவோர்! 

சாட்சியம் நான்கு
வேதபுரத்துக்கு கணக்குப் பிள்ளை யார்?
காற்றில் கணக்கெழுதும் கடவுளின் ஏவலாள் ! 

சாட்சியம் ஐந்து
வேதபுரத்தாருக்கு ஆசீர்வதிக்கபட்ட சாஸ்திரம் எது?
கார்ப்பரேட்டே கடவுள். கடவுளே கார்ப்பரேட் !

சாட்சியம் ஆறு
வேதபுரத்தாரின் விதிதான் என்னவோ?
வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவது …
 
சாட்சியம் முடிவதில்லை
கடவுளின் வரம் பெற்ற    
சில குழந்தைகள் பஞ்சு மெத்தையில்
சபிக்கப்பட்ட கோடிக்கணக்கான சாத்தானின் குழந்தைகள் சாக்கடையில் 

கடவுளின் ராஜ்யம் சமீபத்திருக்கிறது
கண்ணெதிரே சாட்சியங்கள் வரிசை கட்டுகின்றன.