tamilnadu

img

இரு பாடலாசிரியர்களின் மறைவு... - சோழ.நாகராஜன்

மறைந்த பாடலாசிரியர் புலமைப்பித்தன் மிகவும் தனித்துவமான கவிஞர்.  நல்லார் - தீயார்,  உயர்ந்தார் - தாழ்ந்தார் நமக்குள் யார் யாரோ...  - என்று கேட்டதன் வாயிலாக இருவேறுலகம் என்பது இருவேறு வர்க்கங்களாகத்தான் யதார்த்தத்தில் பிரிந்து கிடக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லிய பாங்கு அவரின் தனித்துவ அழகும்கூட.  எம்.ஜி.ஆரின் பாடலாசிரியர் என்று அறியப்பட்டிருந்தாலும் எல்லோருக்கும் எழுதி யாரும் வாழப் பாடிய காற்றாக அவர் வாழ்ந்து சென்றிருக்கிறார். அரசவைக் கவிஞர் போன்ற கௌரவங்களுக்கு அழகு சேர்த்தவர், நல்ல தமிழின் அடையாளமாகவே வாழ்ந்தவர் புலமைப்பித்தன்.  அதுபோலவேதான் மறைந்த பிறைசூடன் அவர்களும். அவரும் அழுத்தமான தமிழ்ப் பாடலாசிரியர்தான். திரைப்படங்களை விடவும் பக்திக்கு அதிக முக்கியத்துவம் தந்து பாடல்கள் எழுதியிருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு அவரின் பாடல் பங்களிப்பென்பது குறிப்பிடத்தக்கதுதான்.  மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா, என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேருமென்னடி போன்ற பாடல்கள் எப்போதும் ரசிகர்களின் உள்ளங்களில் பிறைசூடனை ரீங்கரித்துக்கொண்டே இருக்கச் செய்ய வல்லன.

;