tamilnadu

img

தில்லியில் பயங்கர சம்பவம் கார் குண்டு வெடித்து 10 பேர் உடல் சிதறி பலி 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தில்லியில் பயங்கர சம்பவம்கார் குண்டு வெடித்து 10 பேர் உடல் சிதறி பலி 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

புதுதில்லி, நவ.10- நாட்டின் உச்சபட்ச பாது காப்பு வளையத்தில் இருக் கும் தில்லி செங்கோட்டை பகுதியில் திங்களன்று மாலை கார்குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் உடல் சிதறி பலியாகி  இருப்பதாக முதற்கட்டத் தக வல்கள் தெரிவித்தன. மேலும், 20-க்கும் அதிகமா னோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாரா யணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  காரில் குண்டு வெடித்  ததா? இல்லை, வேறு எது வும் பொருள் வெடித்ததா? என்பது தொடர்பாக திங்க ளன்று இரவு 9 மணி வரை  உறுதியான தகவல் எதுவும்  வெளியாவில்லை. எனினும்,  குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்த தால், பல மீட்டர் தொலை வில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடி கள் உடைந்தன.  தில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேசனின் 1-ஆவது நுழைவு வாயில் அருகில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் “6 கார்  கள், இரண்டு இ-ரிக்‌ஷாக்கள்  மற்றும் ஒரு ஆட்டோ ரிக்‌ஷா தீயில் கருகி விட்டன” என்று  தீயணைப்புத் துறை அதி காரி ஒருவர் தெரிவித்தார். தில்லி தீயணைப்புத் துறையினருக்கு மாலை 6:55 மணியளவில் வெடிப்பு குறித்து அழைப்பு வந்துள்  ளது. அதன் பிறகு 7 தீய ணைப்பு வாகனங்கள் மற்றும் 15  ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந் தன. அவர்கள் போராடி, இரவு  7.29 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தில்லியில் உச்சபட்ச பாதுகாப்பு பகுதியான செங்கோட்டை பகுதியில்  நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி யில் உயர் பாதுகாப்பு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உஷார்  நிலைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. குண்டுவெடித்த இடத் தில் தேசிய புலனாய்வு முகமை (NIA), தேசிய பாது காப்புப் படை (NSG) குழு வினர் விசாரணை நடத்தினர்.