tamilnadu

img

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்களன்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 செஸ் போட்டியின் பரிசளிப்பு விழாவில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் - 2024 செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சேலஞ்சர்ஸ் பிரிவு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கேடயம் மற்றும் பரிசு தொகைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் ஜெங்மேநாத ரெட்டி, புகழ்பெற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் வீரர் டி.குகேஷ் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.