tamilnadu

img

குடியுரிமை மனுக்களில் உச்சநீதிமன்றம் மவுனம் காப்பது ஆபத்தானது: எம்.ஏ.பேபி

திருச்சூர், செப்.21- இந்தியக் குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாக்கும் மோடியின் நட வடிக்கை மிகவும் ஆபத்தானது என்றும் அரசமைப்பு சாசனத்தை மீறும் இந்த சட்ட உருவாக்கத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் ஆபத்தானது என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்எம் பேபி கூறினார். திருச்சூரில் தேசாபிமானி உள்ளூர் குழு ஏற்பாடு செய்த தொடர் சொற்பொழி வில் ‘வெளிப்புற ஓடாகும் ஜனநாயகம்’ என்ற  தலைப்பில் அவர் பேசுகையில், சிஏஏ அர சியலமைப்பு ரீதியாக இருக்கிறதா என்று  ஆராய மனு செய்யும் போது சரியான நேர த்தில் முடிவுகளை எடுக்க, நீதிபதிகளுக்கு ஊதியமாக மக்களின் வரிப் பணம்தான் கொடுக்கப்படுகிறது. நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திலிருந்து நீதி பதிகளுக்கு ஊதியம் வழங்கப்படுவ தில்லை. பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கா னிஸ்தானிலிருந்து வரும் மக்கள் நிபந்த னைகளுக்கு உட்பட்டு குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கும்போது, முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வேண்டாம் என்ற சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது ஒன்றிய அரசு. ஆனால், மற்ற மதங்களுக்கு இந்த தடை இல்லை. நாட்டின் அரசமைப்பு சாசனத்தை மீறி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

கேசவானந்த பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் விரிவடைந்த அமர்வு அரசமைப்பின் அடிப்படை கோட்பாடுகளை பாதிக்கும் எந்த ஒரு திருத்தமும் சாத்திய மில்லை என்று அறிவித்தது. முதல் பார்வை யிலேயே, ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை மறுப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்பது தெளிவாகும். ஆனால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தூசி படிந்து வருகின்றன. மோடி அரசு நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்தி வருகிறது. சிந்தனையாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஸ்டான் சுவாமி, பொய்யான குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு ஆளும் வர்க்கத்தால் படு கொலை செய்யப்பட்டார். கோவிட் சூழ்நிலையை பயன்படுத்தி வலதுசாரி தீவிரவாதம் பரவி வருகிறது. ஆர்எஸ்எஸ்-ஸின் மத தேசியமும் திணிக்கப்படுகிறது. ஊடகங்களும் ஒடுக்கப்படுகின்றன. உண்மை பேசிய பன்சாரே, கல்புர்கி, கவுரி  லங்கேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஜனநாயகத்தை அழிக்க பிற்போக்கு சக்திகள் மதம், நிறம், இனம்,  வட்டாரத்தை தவறாகப் பயன்படுத்து கின்றன. அதற்கு எதிராக ‘நாம் ஒன்று’  என்ற செய்தியை முற்போக்கு இயக்கங் களால் முன்னெடுக்க முடியும் என்றார்.

;