tamilnadu

img

வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் - ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்பு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 

சென்னை,அக்.20- தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அண்மை யில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடை பெற்றது. இதில் 153 மாவட்ட ஊராட்சி  வார்டு உறுப்பினர்கள், 1,420 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 3,002  கிராம ஊராட்சிமன்றத் தலை வர்கள், 23,185 கிராம ஊராட்சி வார்டு  உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திமுக  139 மாவட்ட ஊராட்சி வார்டு  உறுப்பினர்கள், 982 ஊராட்சி ஒன்றிய  வார்டு உறுப்பினர்களை கைப்பற்றி யது.  காங்கிரஸ் 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், அதிமுக 2 உறுப்பினர்களும், இதர கட்சியினர் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதே போல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 212, காங்கிரஸ் 33, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  3, தேமுதிக 1, இதர கட்சியினர் 177 பேர் வெற்றி பெற்றனர். பஞ்சாயத்து தலைவர் தேர்தல் சுயேட்சை சின்னம் என்றாலும் பெரும்பான்மையான இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்றிருந்தனர்.   வெற்றி பெற்ற அனைவரும் புதனன்று(அக்.20) காலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி அலுவல கங்களிலும் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப் பட்டிருந்தன. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்காக வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன் சிலர்களாக வெற்றி பெற்றவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தில் (பி.டி.ஓ. அலுவலகம்) தேர்தல் அதி காரிகள் முன்னிலையில் பதவி ஏற்ற னர். ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி மன்றக் கூடத்தில் பதவி ஏற்றனர். 

சிபிஎம் கவுன்சிலர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநா வலூர் ஊராட்சி ஒன்றிய 5-ஆவது வார்டு கவுன்சிலராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் இ. அலமேலு புதனன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினராக பொறுப்பேற்று ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றிய 11ஆவது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ச.சசிகுமார் புதனன்று  சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூர் ஒன்றியம் 14வது ஊராட்சி ஒன்றி யக்குழு உறுப்பினர் (அரும்புலியூர், பழவேரி) பதவிக்கு சிபிஎம் சார்பில் போட்டியிட்ட கே.தீபா வெற்றி பெற்றார். அவரும் பிடிஓ அலுவல கத்தில் கவுன்சிலராக பதவி யேற்றுக்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம்  பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய 2வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சமாதானம் வெற்றி பெற்றார். அவரும் கவுன்சிலராக பதவியேற்றுக்கொண்டார்.

ஊராட்சி மன்றம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூர் ஒன்றியம் பழவேரி ஊராட்சி  மன்றத் தலைவராக போட்டியிட்டு வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியம் செஞ்சி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற ஆர்.மல்லிகா இருவரும் புதனன்று(அக்.20) அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலங்களில் தலைவர்களாக பதவியேற்றனர்.

அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் எம்.எல்ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பஞ்சாயத்து அலுவலகமும்  கோலாகலமாக காணப்பட்டது. இதே போல் ஊராட்சி ஒன்றிய அலு வலகங்கள், மாவட்ட ஊராட்சி அலு வலகங்களிலும் திருவிழா போல பதவி ஏற்பு விழா நடந்தது. எங்கு பார்த்தா லும் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  உறுப்பினர்கள் அனை வரும் தங்களது குடும்பத்தினர் புடை சூழ பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். குரூப் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர். 

மறைமுக தேர்தல்

அக்டோபர்  22 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலை வர், துணைத் தலைவர் பதவி களுக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள். இதே போல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகளுக்கும் அக்டோபர் 22ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.  

 

;